தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமூச்சு விடுகிறார்கள்
பிரேம் ஜிக்கு திருமணம் உறுதியாகியிருக்கிறது..
இது போல் பல முறை அறிவிப்பு வந்து பிறகு அது வதந்தி என்று முடிந்து போனது. இந்த முறை வதந்தி அல்ல உண்மை என்பதை நமக்கு கங்கை அமரனே உறுதிபடுத்தினார்.
சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்தான் பிரேம்ஜியின் வாழ்க்கையில் விளக்கேற்ற வந்தவர்.
கங்கை அமரன் தாங்க முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறார்.
கங்கை அமரன் மணிமேகலை இருவரின் மகன்கள் வெண்க்கட்பிரபு, பிரேம்ஜி இருவரில் வெங்கட்பிரபு சரியான நேரத்தில் திரையுலக வாழ்க்கையிலும் திருமண வாழ்க்கையிலும் கால் பதித்து தனது முத்திரையை பதித்து வருகிறார்.
ஆனால் பிரேம் ஜி மட்டும் சினிமாவில் இசைய்மைப்பாளராக ஒரு சில திரைப்படங்களில் பணியாற்றினார். அது அவருக்கு வெற்றிகரமாக கைகொடுக்க வில்லை. ஆனாலும் தம்பி பிரேம் ஜி யை அரவணைத்துக் கோண்டு தன்னுடைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார் வெங்கட் பிரபு. இதன் மூலமாகவே ரசிகர்களிடம் அறிமுகமாகி பிரபலமானார். இதனால் பிரேம் ஜி தோன்றும் காட்சிகளில் தியேட்டர்களில் கைதட்டல் எழுந்தது.
இதனால் அவரை நகைச்சுவை பாத்திரத்தில் பலரும் நடிக்க வைக்க விரும்பினார்கள். இதனால் 50க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இடையிடையே பிளான்பண்ணி பண்ணனும், கசட தபற, குட்டி ஸ்டோரி, ஜாம்பி உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
தொடர்ந்து தனது ச்கோதர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா கியோரிடம் இசைய்மைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவர் எப்போதும் பார்டி பாய் என்கிற அடையாளத்தோடு திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. அதனால் பிரேம்ஜி போகும் இடங்களிலெல்லாம் அவரை முரட்டு சிங்கிள் என்ற அழைத்தனர்.
இதனை ஜாலியாகவே எடுத்துக் கொண்ட பிரேம்ஜி வெங்கட் பிரபு படங்களில் தனது திருமணம் நடக்காததை பற்றி வசனங்களிலும் காட்சிகளிலும் வெளிப்படுத்தி தியேடரில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். கார்த்தியுடன் இஅவர் நடித்த்ப பிரியாணி படத்தில் தான் காதலிக்கும் பெண்கள் எல்லாம் தன் கையை விட்டுப் போய் விடுவது போன்ற காடி ரசிகர்களிடம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது.
இப்படியாக திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்து வந்தாலும் பிரேம்ஜி இசையமைப்பதில் பாடுவதில் திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான சத்யசோதனை திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப்படங்களில் மட்டும் ஜாலியான நபராக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் குறுபுத்தங்களை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் பிரேம் ஜி. ஒரு முறை பாகவதர் போல வேடமிட்டு இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு புதிய படத்திற்கு டியூன் போடுவது போன்ற ஒரு வீடியோவை எடுத்து இணையத்தில் பரவ விட்டு கலகலப்பை ஏற்படுத்தினார். இதனை இளையராஜாவே ரசித்து சிரித்து பிரேம்ஜியை அழைத்து பேசியதும் நடந்தது.
இது நாள் வரைக்கும் கட்டுத்தறி காளையாக சுற்றிக் கோண்டிருந்த பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்க வேகமாக பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு கங்கை அமரனின் உடல் நிலை சரியில்லாமல் போனதும் , வெங்கட் பிரபுவின் வற்புறுத்தலும் அதிகரிக்க ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருக்கிறார்.
தங்கள் உறவினர் பெண்கள் வழியாக அறிமுகமான இந்து என்ற பெண்ணைப் பார்த்து பேசி நட்பாக பழகி வந்தார். அது காதலாகி, இருவீட்டாரின் பெரியோர்கள் பேசி இதனை சுமூகமான சூழலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். வரும் ஜுன் 9ம் தேனி திருத்தணி முருகன் கோவிலில் இருவீட்டாரின் முன்னின்லையில் பிரேம் ஜி அமரனுக்கும் மனப்பெண் இந்துவிற்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.