No menu items!

விஜய் பேச்சு – இதுதான் ரியாக்‌ஷன்!

விஜய் பேச்சு – இதுதான் ரியாக்‌ஷன்!

தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள்..

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:

விஜய் பேசியதை நான் கேட்கவில்லை. விஜய் பேசியதை கேட்டு விட்டு, பதில் அளிக்கிறேன்.விஜய்யின் முழுப் பேச்சை பார்த்த பிறகு தான், பேச முடியும்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி:

விஜய் ‘ஏ டீமும்’ இல்லை, ‘பி டீமும்’ இல்லை. பா.ஜனதாவின் ‘சி டீம்’. நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு. கூட்டத்தை காட்டுவதற்காக இந்த மாநாட்டு ஷோவை நடத்தியுள்ளனர். அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் திமுக பற்றி விஜய் பேசி உள்ளார். அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை. தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தபின் ஆட்சியில் பங்கு கொடுப்பது பற்றி பேசட்டும்.

அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். பாஜகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுக்கவே அதிமுகவை பற்றி விஜய் எதுவும் பேசவில்லை. நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே திமுக நிறைய கூட்டம் நடத்தி உள்ளது. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. சிறுபான்மையினர் நலன் மற்றும் கொள்கைக்காக 2 முறை ஆட்சியை இழந்த கட்சி திமுக கவர்னரை எதிர்த்து பேசினால் தான் தமிழகத்தில் எடுபடும். திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் ஒரு இயக்கமாக திமுக உள்ளது.

சீமான் (நாம் தமிழர் கட்சி)

திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கண் என்று அவருடைய கருத்துகள், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. கருவாட்டு சாம்பார் என்பதுபோல் இருக்கிறது விஜய் இரண்டையும் சேர்த்துப் பேசியிருப்பது.

இது என் நாடு, என் தேசம், இங்கு வாழுகின்ற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். எங்களுடைய கொள்கை தமிழ் தேசம். எனவே எங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்றாக இல்லை. மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. மற்றபடி, சில விஷயங்களில் நாங்கள் சொல்வதையே அவரும் சொல்கிறார்.

தமிழிசை சவுந்தர்ராஜன்:

தமிழகத்தில் ஒரு புதிய கட்சி உதயமாகி இருக்கிறது. விஜய் கட்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சில நிகழ்வுகள் நடந்ததற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உதாரணத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. பேசுவதற்கு முன்னால் தாய் தந்தையரை வணங்கியது. அடையாளத்தை உறுதிப்படுத்தியது. பதநீரை மாநில பானமாக அறிவிப்பேன் என்று கூறியது.

இன்று தனது எதிரிகளை அடையாளப்படுத்துகிறேன் என்று கூறி. அரசியல் எதிரி என்று திமுகவை அடையாளப்படுத்தியது வரவேற்கத்தக்கது.

பாஜகவை மறைமுகமாக என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாஜக மக்களை பிளவு படுத்தவில்லை என்ற தங்கள் கொள்கைதான் மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் அனைத்து திட்டங்களும். அனைவருக்கும்… என்ற தாரக மந்திரம்.

ஆளுநர்களை நீக்க வேண்டும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மாநிலத்திற்கு நல்லது செய்த ஆளுநர்களும் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்பேத்காரை பாராட்டி விட்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் பதவியை அவ்வளவு இலகுவாக நீக்குவேன் என்று சொல்வது சரியல்ல.

தமிழக மாணவர்கள் 14 இலட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அரசு பள்ளி மாணவர்கள் 7.5 ரிசர்வேஷன் இல்லாமலேயே மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார்கள்.

இருமொழிக் கொள்கை ஆதரிக்கிறிரோம் என்று கூறிகிறீர்கள்.தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

உங்கள் அரசியல் எதிரியை மக்கள் நலனுக்காக முன்னெடுத்துச் சென்றால் நல்ல அரசியல் மாற்றத்திற்கு இயக்கம் வித்திடக்கூடும். மக்களுக்கான சேவையை முன்னெடுத்துச் செல்லுங்கள்

தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. (திமுக):

எத்தனை கட்சிகள் வந்தாலும் சரி; அதுகுறித்து கவலையில்லை; ஏனெனில் உதயசூரியன் என்றுமே நட்சத்திரங்களைப் பார்த்து அஞ்சியது கிடையாது; உதயசூரியனுக்கு நட்சத்திரங்களைப் பற்றி கவலையும் கிடையாது.

ரவிக்குமார் எம்பி (விடுதலைச் சிறுத்தைகள்):

பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்க வேண்டும்
தனது கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக புரட்சியாளர் அம்பேத்கரை விஜய் குறிப்பிட்டிருக்கிறார். மதச்சார்பின்மைதான் தனது கொள்கை என்று அறிவித்திருக்கும் விஜய், இன்று மாநாட்டு மேடையில் இந்து மதத்தின் குறியீடாக பகவத் கீதையையும், இஸ்லாம் மதத்தின் குறியீடாகக் குர்ஆனையும், கிறிஸ்தவ மதத்தின் குறியீடாக பைபிளையும் நினைவுப் பரிசாகப் பெற்றார்.

பகவத் கீதையைப் பற்றி அம்பேத்கர், ‘புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

“பௌத்தம் இந்த சமூகத்தில் தார்மீக மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. மௌரியப் பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியபோது, சமூகப் புரட்சி அரசியல் புரட்சியாக மாறியது. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பௌத்த மன்னர்களால் பாதிக்கப்பட்ட பிராமணர்கள், புஷ்யமித்ர சுங்கனின் தலைமையில் ஒரு எதிர்ப்புரட்சியைத் தொடங்கினார்கள். அந்த எதிர்ப்புரட்சிதான் பிராமணியத்தை மீட்டெடுத்தது.பகவத் கீதை, இந்த எதிர்ப் புரட்சிக்குக் கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக இயற்றப்பட்டது.” என்று தனது நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...