No menu items!

மக்களை சந்திக்காத விஜய்!  – விஜய் ரசிகர்கள் பதில் என்ன?

மக்களை சந்திக்காத விஜய்!  – விஜய் ரசிகர்கள் பதில் என்ன?

விஜய் புதிய அமைப்பை ஏற்படுத்திய சில நாட்களிலேயே வந்த் பெரிய தேசிய பேரிடராக அமைந்து விட்டது சமீபத்தில் பெய்த மழை. அவர் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்து கொண்டிருந்தது. இதனால் சிறிது நேரத்திலேயே  அவரது கட்சியினர் பம்பரமாக சுற்ற ஆரம்பித்தனர்.

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. புயல் கரையை கடந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டது என்றாலும், பரவலாக நல்ல மழை பெய்து வருவதோடு ஆங்காங்கே இன்னும் வெள்ள நீர் வடியாமலே இருந்து வருகிறது. திருவண்ணாமலையில் கனத்த மழையால் ஏற்பட்ட நிலச் செலவில் சிக்கி, 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசிடம் 2000 கோடி ரூபாய் நிதி கேட்டு மாநில அரசிடமிருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில் விஜய் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்.

புயல் என்பது பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்குகின்ற ஒரு இயற்கை சீற்றம் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் எவ்வளவு பெரிய இயற்கை பேரிடராக இருந்தாலும், நம்மை காக்க நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு நம்மோடு இருக்கின்றது. ஆட்சி பீடத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்”.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களை கைவிடும் என்பதை இப்போது மக்கள் அனுபவித்து உணரும்பொழுது அவர்களுடைய துயரை வார்த்தையால் வர்ணிக்க முடியாமல் போகிறது. ஆட்சியாளர்களை அதிகாரத்தில் அமர வைத்து அழகு பார்த்த மக்களை பாதுகாக்க முறையான திட்டங்களில் தீட்டப்படவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூட செய்யாமல் அவர்களை பரிதாப நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்வது?”.

“கடந்த பல ஆண்டுகளாகவே நமது நற்பணி மன்றங்கள் மூலமாகவும், மக்கள் இயக்கங்கள் மூலமாகவும் இயன்ற அளவில் நாம் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து இருக்கிறோம். மக்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்திருக்கிறோம். நம் சேவை உணர்வால் அவர்கள் அனைவரோடும் உறவுகளாக பழகியவர்கள் நாம். ஆகவே என் நெஞ்சில் குடியிருக்கும் கழக தோழர்கள், பாதுகாப்பான முறையில் மக்களுக்கு பணி செய்திட வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்

ஆனாலும்  விஜய் நேரடியாக களத்திற்கு செல்லாமல் தான் இருக்கும் இடத்திற்கே வரவழைத்து கொடுப்பது நல்லதல்ல. என்று கடுமையான விமர்சனங்கள் வந்திருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்டு மக்களை சந்திக்காமல் அவர் இருக்கும் இடத்துக்கு வரவழைப்பதா என்ற கேள்விகள் எழுந்தன. 

ஆனால் விஜய் தரப்பில் அதற்கு வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜய் சென்றால் இதுபோல் அருகில் அமரவைத்து அவர்கள் குறையைக் கேட்க முடியுமா அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க முடியுமா என்று  பாதிக்கப்பட்டவர்களுடன் செல்பி எடுக்க முடியுமா என்று பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.   

பதில்கள் தந்தாலும்  விஜய் நேரடியாக மக்களை சந்திக்காதது அவர் அரசியலில் ஒரு நெருடல்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...