விஜய்யின் புதிய அரசியல் கட்சியைப் பற்றி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் வெளியிட்ட பதிவுகள்..
ப்ளூ சட்டை மாறன்:
ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப்போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை. அந்த வகையில் அவர்களை விட இவர் எவ்வளவோ மேல்.
யாருக்கு எதிரான அரசியல் செய்வார்? என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம். இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும்.
மீரான் முகமது:
மக்களைப் பற்றிய எந்த சிந்தனையும் தேவை இல்லை. சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி எந்த கருத்தும் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களுக்காக போராடி சிறை சென்றிருக்கவும் தேவையில்லை. தனக்கென்று தனி கொள்கை, கோட்பாடு, லட்சியம் எதுவும் தேவையில்லை.
60 திரைப்படங்களில் நடித்தால் போதும், பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகமும் பெண்களுக்கு தையல் மெஷினும் கொடுத்தால் போதும். அடுத்த முதல்வராகி விடலாம் என்று நினைக்கிறதுக்கே இந்த சமூகத்தில் துணிச்சலிருப்பதுதான் ஆச்சர்யம்.
தொகுதிக்கு 5 ஆயிரம் ஓட்டைக் கொண்டு ஒரு கட்சிக்கு சாதகத்தையும், ஒரு கட்சிக்கு பாதகத்தையும் ஏற்படுத்துவதை தவிர விஜய் கட்சி வேறு எதையும் சாதிக்கப் போவதில்லை. ஒருவேளை கட்சி வெற்றி பெற்று, விஜய் முதல்வராகிவிட்டால்…
அவரது ‘விக்’கைத் தவிர
வேறு ஒரு ம*ரும் மாறப்போவதில்லை…
சரவண கார்த்திகேயன்:
விஜய் கட்சிப் பெயரில் திராவிடம் இல்லை, ஆனால் கழகம் உண்டு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது கொள்கை. எனவே சமத்துவம் நோக்கிய பயணம். திராவிடம் பார்ப்பனர்களின் சாதி ஆதிக்கத்தை எதிர்த்துக் களம் கண்டது. அப்பெயர் தவிர்த்த, ஆனால் சமத்துவம் பேணும் அடையாளத்தைக் கை கொள்கிறார் என்றால் இங்கே மீதமிருக்கும் ஆதிக்கத் தரப்பு இடைநிலைச் சாதிகள்தாம்.
எனவே விஜய் தன் முதல் அறிவிப்பிலேயே தான் இடைநிலைச் சாதி வெறிக்கு முழுக்க எதிரானவன் என்று தெளிவு செய்திருக்கிறார்.
சுசித்ரா மகேஸ்வரன்:
நடிகர் விஜய் தேர்தல் அரசியலில் களமாட முடிவெடுத்து கட்சி பெயரை அறிவித்திருக்கிறார். சமூகநீதி, திராவிடம் சொல்லாடல்களை கட்சியின் பெயரிலும், அறிக்கையிலும் கவனமாகத் தவிர்த்திருப்பது தெரிகிறது.
இருப்பினும் இந்திய அரசியலமைப்பிலிருந்து வழுவாது, பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உரக்கச் சொல்வதின் வழியாக மட்டுமே தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தையும் தமிழக மக்களின் மனங்களையும் நெருங்க முடியும் என்ற திராவிட பண்பாட்டைப் புரிந்து வைத்திருக்கிறார்.
தந்தை பெரியார் ‘குடிஅரசு’ வார இதழை 1925-ல் தொடங்கியபோதே
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
“ஒழுக்கம் உடமை குடிமை இழுக்க
இழிந்த பிறப்பாய் விடும்” ஆகிய குறள்களை இதழின் முகப்பில் தலைப்பகுதியில் இடம்பெறச் செய்தார் என்பது இங்கு துணுக்கு செய்தி.
ஒழுக்கம் நேர்மை லட்சியம் கொள்கை இனி அரசியலுக்கு தேவையில்லை என்பது நிர்ணயமாகிவிட்டது போன்றே தோன்றுகிறது இந்த தமிழ்நாட்டில்.பணம் ஒன்றிருந்தால் போதும் தலைவனாகிவிடலாம் என்ற எண்ம் எல்லோருக்கும் வந்துவிட்டதாகவே தோனாறுகிறது.வாழ்க தமிழ்நாடு.
ஒழுக்கம் நேர்மை லட்சியம் கொள்கை இனி அரசியலுக்கு தேவையில்லை என்பது நிர்ணயமாகிவிட்டது போன்றே தோன்றுகிறது இந்த தமிழ்நாட்டில் பணம் ஒன்றிருந்தால் போதும் தலைவனாகிவிடலாம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிட்டதாகவே தோனாறுகிறது.வாழ்க தமிழ்நாடு.
Reply