நடிகை கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் திருமணம், கோவாவில் உள்ள பிரபல நட்சத்திர ரிசார்ட்டில் நேற்று காலை நடந்தது. மணமகள் கீர்த்தி சுரேஷின் தாய் வழி பூர்வீகம் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி. அதனால் ரிசார்ட்டில் திருமணம் நடந்தாலும், பாரம்பரிய, தமிழக வைதீக முறைப்படி நடந்ததது. ஆண்டாள் கொண்டை, நெற்றியில் திருநாமம் இட்டு, தந்தை மடியில் கீர்த்திசுரேஷ் அமர, அவருக்கு தாலி கட்டினார் மணமகன் ஆண்டனி. கேரள முறைப்படி விருந்து நடந்துள்ளது.
இந்த திருமணத்துக்கு கீர்த்தி மற்றும் மணமகன் வீட்டை சேர்ந்தவர்கள் என வெகு சிலரே கலந்துகொண்டனர். தமிழ் திரையுலகம் சார்பில் யார் கலந்துகொள்கிறார்கள் என்ற சஸ்பென்ஸ் நிலவி வந்த நிலையில், விஜய் அங்கே இருக்கிறார் என்பதை ஒரு புகைப்படம் நேற்று காலை காட்டிக்கொடுத்தது. விஜயின் பாதுகாவலர்கள் நேற்று காலை எடுத்த ஒரு போட்டோ நெட்டில் வைரலானது.
பட்டுவேட்டி, சட்டையுடன் விஜய் கோவாவில் இருக்கிறார் என்று அந்த புகைப்படம் சொல்ல சொல்ல, கீர்த்திசுரேஷ் திருமணத்துக்கு விஜய் சென்று இருக்கிறார் என்ற செய்தி வைரலானது. ஆனால், மீடியாவுக்கு அவர்கள் கொடுத்த போட்டோக்களில், கீர்த்தி தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்ட போட்டோக்களில் விஜய் வந்தார் என்று சொல்லப்படவே இல்லை. விஜய் வருகை சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், ஒரு போட்டோ அதை காண்பித்துக்கொடுத்துவிட்டது
தமிழகத்தில் புயல், மழை பாதிப்பு வந்தபோது, பாதிக்கப்பட்டவர்களை தனது ஆபீசுக்கு அழைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார் த.வெ.க. தலைவரான விஜய். அந்த செயல் விமர்சனத்துக்கு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல், தனது ஆபீஸ் வரவழைத்து நிவாரணம் வழங்குவதா, இதென்ன புது பழக்கம் என்று பலர் விஜயை வறுத்தெடுத்தனர். ஆனால் விஜய் தரப்போ, அவர் நேரில் சென்றால் கூட்டம் கூடிவிடும். அதனால், இப்படி செய்தோம் என்றது. புயல், மழை பாதிப்புக்கு நேரில் செல்லாதவர், கீர்த்திசுரேஷ் திருமணத்துக்கு கோவா சென்றார் என்று செய்திகள் வந்தால், அது கெட்டபெயர் ஏற்படுத்துமே என்ற விஜய் தரப்பு கருதியதால் போட்டோக்களை வெளியிடவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், விஜயின் ரகசிய பயணம் ஒரே போட்டோவால் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
இதற்கிடையே, நேற்று மாலை விஜய் மட்டும் கோவா செல்லவில்லை. அவருடன் திரிஷாவும் சென்று இருக்கிறார். இரண்டு பேரும்தான் புது ஜோடியை வாழ்த்தியிருக்கிறார்கள். அதுவும் இரண்டுபேரும் தனி விமானத்தில் சென்று இருக்கிறார்கள். அந்த பயணம் படு ரகசியமாக இருந்தது என்று நெட்டிசன்கள் கோவாவில் விஜய்,திிரிஷா இருக்கும் ஆதாரம், போட்டோவுடன் சோஷியல் மீடியாவில் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இன்னமும் திரிஷாவும் தான் கீர்த்திசுரேஷ் திருமணத்துக்கு சென்றேன் என்று ஓபனாக சொல்லவில்லை. விஜய், திரிஷா தவிர, மாமன்னன் பட இயக்குனர் மாரிசெல்வராஜ், நடிகைகள் மாளவிகாமோகனன், கல்யாணிபிரியதர்ஷன் ஆகியோரும் கோவா சென்றுள்ளார்கள் என அடுத்த கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.