வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் நடித்த விடுதலை2 படம், கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியானது. இதுவரை படத்தின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விடுதலை 2 படத்தின் வசூல் ரூ 100 கோடியை தாண்டிவிட்டதா? படம் வெற்றி படமா? என்று விசாரித்தால், பல புது தகவல்கள் கிடைக்கின்றன.
விடுதலை முதற்பாகம் பெரிய ஹிட். ஆனால், அந்த அளவுக்கு விடுதலை 2 வெற்றி பெறவில்லை. அதேசமயம், வசூலில் எந்த குறையும் இல்லை. இதுவரை 50 கோடியை தாண்டிவிட்டது. விரைவி்ல் முறைப்படி வசூல் நிலவரத்தை அறிவிக்க உள்ளார்கள். கடந்த சில தினங்களுக்குமுன்பு படத்தில் பணியாற்றியவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டுள்ளது. இன்று சில தினங்களில் சென்னையில் நன்றி அறிவிப்பு விழா நடத்தப்பட உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் ஹிட்தான். ஆனால், விஜய்சேதுபதியின் மகாராஜா பாணியில் 100 கோடியை எட்டுமா என்பது சந்தேகம்தான்.
தமிழகத்தில் புஷ்பா 2, ஆங்கில டப்பிங் படமான முபாசா ஆகியவை நன்றாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. விடுதலை 2-வை விட இந்த படங்களின் வசூல் அதிகம்தான். படத்தின் நீளம், சில சீன்கள், திரைக்கதை காரணமாக விடுதலை2வுக்கு சில பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், விடுதலை வெற்றி படம்தான்.’’ என்கிறார்கள்
விடுதலை2 படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனும் புது சாதனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி. இதுவரை அவர் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘அசுரன்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘விடுதலை’, ‘விடுதலை2’ என 7 படங்களை இயக்கியுள்ளார். இது அனைத்தும் வெற்றி படங்கள். தமிழில் இப்படி தொடர்ச்சியாக வெற்றி என்பதை இயக்குனர் கே.பாக்யராஜ், ஷங்கர் போன்றவர்களே பெற்று இருக்கிறார்கள். அந்த பட்டியலில் வெற்றிமாறனும் சேர்ந்துவிட்டார். அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். அதற்கடுத்து த னுசை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் என்று பேசப்படுகிறது