பாகுபலியில் நடித்ததால் தமன்னா அடித்தது அதிர்ஷ்டம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்து ஒரு ரவுண்ட் முடித்து ஏறக்குறைய கட்டாய ஓய்வில் இருந்தவருக்கு செகண்ட் ரவுண்டுக்கான வாய்ப்புகள் உருவானது.
மளமளவென வெப்சிரீஸ்களில் நடிக்க ஆரம்பித்தவர் இப்பொழுது மீண்டும் பிஸியாக மாறிவிட்டார்.
இந்நிலையில் தமன்னாவுக்கு திருமணம் என்ற பேச்சு அதிகம் உலா வர ஆரம்பித்திருக்கிறது. நயன்தாரா, காஜல் அகர்வால் என ஒவ்வொருவராக திருமணமாகி திரும்பவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல் வயது ஏறிக்கொண்டே போவதால் கல்யாணம் பண்ணிக் கொள்ள தமன்னா அம்மா வேண்டுகோள் வைப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.
’எல்லோரும் திருமணமாகை செட்டிலாகி கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு கல்யாணம் பற்றி எந்தவொரு சிந்தனையும் இல்லை. நானே என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்காத போது பத்திரிகைகளில் எனக்கு கல்யாணம்னு வெளியிடுறாங்கன்னே தெரியல. குழந்தைத்தனமா இருக்கு. எனக்கு மேரேஜ் பண்ணனும்னு தோணும் போது, அதை வெளிப்படையா சொல்லப் போறேன். கல்யாணத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அது என்ன செய்ய கூடாத குற்றமா.’’ என்று உணர்ச்சி வசப்பட்டவராக தனது டும் டும் டும் விஷயத்திற்கு தற்காலிமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
எகிறும் பட்ஜெட். வேகம் காட்டும் ஷங்கர்.
’விக்ரம்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றி ஷங்கரின் மேக்கிங் ஸ்டைலையே ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்கிறது.
பொதுவாக ஒரு படத்தை இயக்குவதென்றால் ஷங்கரின் கவனம் அப்படத்தின் மீது மட்டுமே இருக்கும். அப்படம் முடிந்து வெளியானதும், அடுத்தப் படத்தை சில மாதங்கள் கழித்தே ஆரம்பிப்பார்.
ஆனால் இப்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படம், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ என இரு படங்களிலும் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஷங்கர்.
ஒரே நேரத்தில் இரண்டுப் படங்களை ஷங்கர் இயக்குவது இதுவே முதல் முறை. இதனால் இரண்டுப் படங்களின் ஷூட்டிங்கையும் மாற்றி மாற்றி எடுத்து கொண்டிருக்கிறார்.
நியூசிலாந்தில் ராம் சரணும், கியாரா அத்வானியும் ஆட்டம் போட்டிருக்கும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கிராஃபிக்ஸில் மிரட்டும் பாடலை ஷூட் செய்து முடித்த கையோடு ஷங்கர் இப்போது இந்தியன் 2-ல் இறங்கியிருக்கிறார். இந்த மாதம் முழுவதும் கமல் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ஜனவரியில் தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
திட்டமிட்டதைவிட இந்த இரு படங்களின் பட்ஜெட் எகிறிக்கொண்டே போவதால் ஷூட்டிங்கை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறதாம். மேலும் இதே பரபரப்பில் ஷூட்டிங்கை முடித்தால்தான் அடுத்த தீபாவளிக்கு படத்தை வெளியிட முடியுமென்பதால் உசைன் போல்ட்டை போல் இரு படங்களின் ஷூட்டிங்களுக்கும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கிறார் ஷங்கர்.
’வாரிசு’ படத்தில் விஜயின் சம்பளம் எவ்வளவு
2023 பொங்கல் ரிலீஸில் எக்கச்சக்கமான, தாறுமாறான எதிர்பார்பை கிளப்பியிருக்கும் படங்கள் அஜித்தின் ‘துணிவு’, விஜயின் ‘வாரிசு’.
இதில் ’வாரிசு’ படத்தின் பட்ஜெட் ரொம்பவே அதிகம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
வாரிசு தமிழ்ப் படம் என்றாலும் தெலுங்கிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்ய இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ களத்தில் இறங்கியிருக்கிறார். முக்கிய பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்குப் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டப்பிங் படங்களை வெளியிட கூடாது என குரல் கொடுத்த அதே தில் ராஜூ இப்போது விஜய் படத்திற்காக தனது கருத்தை மாற்றியிருக்கிறார். பெரும் போராட்டத்திற்கு பின்பு விஜயின் ’வாரிசுடு’ இதர தெலுங்கு சூப்பர்ஸ்டார்களின் படங்களுடன் நேரடியாக மோத இருக்கிறது
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தெலுங்கில் சங்ராந்தியின் போது வெளியாகும் படங்களான பாலகிருஷ்ணாவின் ‘வீரசிம்ம ரெட்டி’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’வை விட வாரிசுவின் பட்ஜெட் மிக அதிகம், திரையரங்குகளில் வெளியிடும் பிஸினெஸ் அதிகம், ஹீரோவின் சம்பளம் அதிகம் என எந்த கோணத்தில் பார்த்தாலும் விஜயின் வாரிசுடு முன்னணியில் இருக்கிறது.
வாரிசு படத்தின் பட்ஜெட் தோராயமாக 240 முதல் 250 கோடி வரை இருக்கலாம் என்கிறார்கள்.
இயக்குநர் வம்சி படிபள்ளி 15 கோடி வாங்குவதாகவும், ராஷ்மிகா மந்தானா மியூசிக் டைரக்டர் தமன் இவர்கள் இருவருக்கும் சேர்த்து ஏறக்குறைய 5 கோடி, படத்தயாரிப்பு செலவு 100 கோடி என கூட்டிக்கழித்துப் பார்த்தால் சுமார் 120 கோடியைத் தொடுகிறது.
ஹைலட்டான சமாச்சாரம் விஜயின் சம்பளம். இப்படத்திற்கு விஜய்க்கு 105 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதோடு மட்டுமில்லாமல் விஜய் வாங்கும் சம்பளத்திற்கு கட்ட வேண்டிய ஜிஎஸ்டி தொகையையும் தயாரிப்பாளரே கட்டியிருக்கிறாராம். ஜிஎஸ்டி மட்டுமே 19 கோடி ஆகிறதாம். எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் விஜய்க்கு சம்பளம் 125 கோடி என்று கணக்கு வருகிறது.