No menu items!

வென்றார் ட்ரம்ப் – இது அமெரிக்காவின் பொற்காலம் என முழக்கம்

வென்றார் ட்ரம்ப் – இது அமெரிக்காவின் பொற்காலம் என முழக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதாக பாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி வெற்றிக்கு தேவையான 270 இடங்களை கடந்து கூடுதலாக பெற்று டிரம்ப் முன்னிலை வகிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2016-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த டிரம்ப் 2020-ம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். 2020-ம் ஆண்டு தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய ட்ரம்ப், நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். ட்ரம்பின் இந்த வெற்றி அவரது ஆதரவாளர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் புளோரிடவாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது…

இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும். துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்த பொறுப்புக்கு சரியான தேர்வு. நாட்டின் முதல் குடிமகள் ஆகவுள்ள என் மனைவி மெலானியாவுக்கு வாழ்த்துகள்.

இந்த தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய எலான் மஸ்குக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு ஜீனியஸ். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அவரைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். ராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம்.

உலகத்தின் மிக முக்கிய பணி இது. அதன் காரணமாக தான் இறைவன் எனது உயிரை காத்தார் என நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் பேசினார்.

பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற எனது நண்பர் டிரம்பிற்கு வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன்.

நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் பாடுபடுவோம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...