No menu items!

முப்படைகளின் தாக்குதல் Strategy

முப்படைகளின் தாக்குதல் Strategy

பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று செய்தியாளர் சந்திப்பில் விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ. என். பிரமோத் ஆகியோருடன் சேர்ந்து விவரித்தார்.

அப்போது ராஜீவ் கயி கூறியதாவது, கடந்த ஒரு சில ஆண்டுகளில் பயங்கரவாதத் தன்மையே மாறியிருக்கிறது. பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீதும், ஆன்மிக சுற்றுலா சென்றோர் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதே அதற்கு உதாரணமாக உள்ளது.

பாகிஸ்தானில் இருந்துதான் தாக்குதல் வரும் என்பதால் அதற்கேற்ப வான் பாதுகாப்பு அமைப்பு தயார் நிலையில் இருந்தது.

பல அடுக்குகளில் ஒன்றை தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும். எனவே, அந்த அடிப்படையில்தான், பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பு அனைத்து ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் வெற்றிகரமாக வீழ்த்தியது. முப்படைகளிடையே மிக உறுதியான ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இருந்தது. இதுதான் தாக்குதல் உக்தியாகவும் இருந்தது.

140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இந்த சண்டை சனிக்கிழமை முடிவுக்கு வந்த நிலையில், இரு தரப்புப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...