ஒருபக்கம் நிலநடுக்கம், பெருமழை, புயல் என அடுத்தடுத்து இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வரும் நிலையில் புவி வெப்பமயமாதலால் பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே நாசா விஞ்ஞானிகள் ஜப்பானின் டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பூமியின் ஆயுட் காலம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சூரிய குடும்பத்தில் 3வதாக உள்ள கோள் பூமி. வேறு எந்த கிரகத்திலும் இல்லாத அளவுக்கு பல்வேறு அதிசயங்களை கொண்டதாக பூமி மட்டுமே உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது. பூமியில் மட்டுமே உயிர்கள் வசிக்கலாம் என்று கருதப்படாலும் சூரிய குடும்பத்தில் வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்ற ஆய்வு ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்தடுத்து இயற்கை பேரிடர்கள்
மனிதர்கள் உள்பட எண்ணற்ற உயிர்கள் வாழக்கூடிய இந்த பூமி, படிப்படியாக அழிவை நோக்கி செல்கிறது என்பது விஞ்ஞானிகள் முன்வைக்கும் வலுவான வாதமாக உள்ளது. புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் இதனால், ஏற்படும் இயற்கை பேரிடர்கள் ஆகியவை இதற்கு முன்னுதாரணமாக உள்ளன. ஒருபக்கம் நிலநடுக்கம், பெருமழை, புயல் என அடுத்தடுத்து இயற்கை பேரிடர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் புவி வெப்பமயமாதல் காரணமாக பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் உயருவதாகவும் இதனால், சென்னை உள்பட பல கடற்கரை நகரங்கள் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும் கூட ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
உயிர்கள் வாழ முடியாத நிலை
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது பூமிக்கு நிச்சயம் ஒரு நாள் பேராபத்து உள்ளது என்பதே பொதுவாக பலரும் கணிப்பதாக உள்ளது. இந்த நிலையில், விஞ்ஞானிகளும் இதை உறுதி செய்து இருக்கிறார்கள். அதாவது, நாசா விஞ்ஞானிகள் ஜப்பானின் டோஹோ பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில்தான் பூமியின் ஆயுட் காலம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் கம்ப்யூட்டர் பல்வேறு வகையான கணித மாடல்களை தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி பூமியின் ஆயுட் காலம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். இதில், 1 பில்லியன் ஆண்டுகளுக்குள் பூமியில் ஒரு உயிர்கள் எதுவும் வாழ முடியாத நிலை வரும் என்று கூறியுள்ளனர். பூமியில் ஏற்படும் தீவிர கால நிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் காரணமாக பூமியில் உயிர்கள் நிலைத்து இருப்பது சாத்தியமற்றதாகவிடும்.
எத்தனை ஆண்டுகள் வாழ முடியும்?
பூமியில் உயிர்கள் அழிவதற்கு சூரியனே காரணமாக இருக்கும். சூரியனின் வெப்ப நிலை கடுமையாக அதிகரிக்கும் எனவும் இதன் ஆற்றல் பூமி மட்டும் இன்றி அதனை சுற்றியுள்ள கோள்களை அழிக்கும் அளவுக்கு தீவிரம் அடையும் என்றும் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளின்படி நம்புகிறார்கள்.