ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் மேலும் வலுத்துக் கொண்டே செல்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக ஜெயம் ரவி ஆர்த்தியால் தான் எப்படியெல்லாம் அவமதிக்கபட்டேன் என்பதை வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்.
இதன்படி ஜெயரம் ரவி பேசியிருப்பதாவது,
ஆர்த்தியுடனான இந்த பிரிவு முடிவுக்கு முன்னதாக, எனது இரண்டு மகன்களில் மூத்த மகனிடம், நான் உங்களுடைய அம்மாவை பிரியப்போகிறேன் என்று கூறினேன். நான் பேசியதை புரிந்து கொண்ட என் மகன், உன்னுடைய சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம், ஆனால் நீங்கள் இணைந்திருந்தால் எனக்கு ரொம்பவும் சந்தோஷம் என்று கூறினான். அவனை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய நான், இது எல்லாம் கொஞ்சம் காலத்திற்கு தான், பிறகு எல்லாமே சரியாகிவிடும். உங்களை நான் பார்க்காமல் இருக்கவே மாட்டேன் என்று கூறினேன்.
என்னுடைய இரு மகன்களில் ஒருவருக்கு ஜூன் மாதம் பிறந்தநாள் நடந்தது அப்போது ஆர்த்தியோடு இணைந்து குடும்பமாகத்தான் அந்த பிறந்த நாளை கொண்டாடினோம். அதேபோல மற்றொரு மகனுக்கு ஆகஸ்ட் மாதம் பிறந்தநாள் வந்தது. அவருக்காக பர்த்டே செலிப்ரேஷன் கொண்டாட நான் பிரபல ஹோட்டல் ஒன்றில் காலை முதல் மாலை வரை காத்திருந்தேன். ஆனால் மாலையில் தான் எனக்கு அவர்கள் இலங்கைக்கு சென்று விட்டது தெரியும். நான் அன்று என் மகனை பார்க்கவே கூடாது என்பதற்காக ஆர்த்தி திட்டமிட்டு அந்த வெளிநாட்டு பயணம்மேற்கொண்டார்.
இதில் நான் பிள்ளைகளை கவனிப்பதில்லை என்று என் மீது வீண் பலி சுமத்துகிறார். கடந்த 13 ஆண்டுகளாக எனக்கு என்று தனியாக ஒரு வங்கி கணக்கு கிடையாது. என் மனைவியின் வங்கி கணக்கோடு இணைந்து தான் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஒன்று வைத்திருக்கிறேன். ஆனால் என் மனைவிக்கு தனியாக மூன்று நான்கு வங்கி கணக்குகள் இருக்கின்றது. நான் வெளியில் சென்று செய்யும் செலவுகளுக்கான கணக்கு கூட அவருக்குத்தான் நேரடியாக செல்லும். இதுகுறித்து நான் அவரிடம் ஏன் என்று கேட்ட பொழுது, நீங்கள் ஒரு ஹீரோ உங்களுடைய பிரைவசி ரொம்பவும் முக்கியம், அதனால் தான் அதை நானே மெயின்டேன் செய்கிறேன் என்று கூறிவிடுவார்.
ஆர்த்தி தனக்கென்று லட்சக் கணக்குகளில் செலவு செய்து கொள்வார். ஆனால் நான் வெளிநாடுகளுக்கு சூட்டிங் செல்லும்போது வெளியில் சென்று ஏதாவது உணவு சாப்பிட்டு விட்டு எனது கார்டை ஸ்வைப் பண்ணினால் கூட, உடனடியாக மெசேஜ் பார்த்துவிட்டு நான் என்ன சாப்பிட்டேன் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்பார். அது அவரே என்னை போனில் அழைத்து கேட்டிருந்தாலும் பரவாயில்லை, சுற்றி இருக்கும் எனது உதவியாளர்களிடம் கேட்கும்பொழுது எனக்கு மிகவும் மன வேதனையை கொடுத்தது.