ரஜினியின் வேட்டையன் படம் எதிர்பாராத பல சிக்கல்களை சந்தித்திருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. தா.ஜெ.ஞானவேல் இயக்கும் இப்படத்தில், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை,ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.
இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏப்ரல் ஏழாம்தேதியன்று அறிவித்தனர்.இப்போது இதன் படப்பிடிப்புகளில் சுணக்கம் ஏற்ப்பட்டிருப்பது ரஜின் இ தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வேட்டையன் படம் குறித்து தயாரிப்பு தரப்பிடம் விபரம் கேட்டிருக்கிறார் ரஜினி. இன்னும் காட்சிகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் மீண்டும் சில நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்று வேண்டியிருக்கிறார்கள். இதில் ரஜினி கோபடமடைந்திருக்கிறார். ஏற்கனவே சில காட்சிகளை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் ஞானவேல் கேட்டுக்கொண்டதால் ரஜினி கொடுத்திருக்கிறார். இப்போது மீண்டும் சில நாட்கள் என்பது அவரது அடுத்தப்பட படப்பிடிப்பு நாட்களை பாதிக்கும் வகையில் இருக்கிறதாம்.
இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் தயாரிப்பு தரப்பு கையை பிசைந்து வருகிறதா. ஏற்கனவே படக்குழுவினர் தரப்பில் படப்பிடிப்பிற்காக சில விலையுர்ந்த கவிகளைக் கேட்டிருக்கிறார்கள். அதையும் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அது படப்பிடிப்பு தளங்களில் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதனால் படக்குழுவினர்க்கும் தயாரிப்பு தரப்புக்கும் கருத்து வேறுபாடு வந்து முட்டிக்கொண்டு நிற்கிறதாம்.
ரஜினியே நேரடியாக தலையிட்டு சரியான திட்டமிடலுடன் படத்தை சரியாக எடுத்து வெளியிடுங்கள் என்று கறார் காட்டியிருக்கிறார். இதனால் மீண்டும் பரபரப்பாக இயக்க ஆரம்பித்திருக்கிறது படக்குழு..
ரஜினி இதுவரைக்கும் தான் நடித்த எந்த படத்திற்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை வேட்டையன் திரைப்படத்திற்கு கொடுத்திருக்கிறார். அதனால்தான் இயக்கிஉனர் ஞானவேல் கேட்டபோதெல்லாம் மேக்கப் கலைத்தும் மீண்டும் நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்டி கதை என்கிறார்கள். படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் ராணா இது பற்றி கூறும் போது ரஜினி இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது அவரது வாழ்க்கையிலேயே வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட திரைப்படமாக இருக்கும். இது காவல்துறை, நீதித்துறை, தொழில்துறை என்று மூன்றுக்கும் நடக்கும் அழுத்தமான சம்பவங்களைக் கொண்ட படம். அதில் நானும் நடித்திப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இது படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. ரஜினிக்கும் படம் விரைவில் சொன்ன தேதியில் வெளியாக வேண்டும் என்ற பதட்டம் இருக்கிறது. அதனால் அவர் அதர்கு வேறொரு வழியையும் கண்டுபிடித்து வைத்திருப்பார் என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் தற்போது இக்காட்டான சூழலில் இருப்பதாக தெரிகிறது. வேட்டையன் படத்திற்கு மேற்கொண்டு பெரிய தொகையை இறக்க முடியாத நிலை உள்ளது . இதை ரஜினியிடமே அரசல் பிரசலாக தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.