சாட்ஸ் என்ற அமைபு உதீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு அவர்களைத் தேடி அழிக்கிறது. அதில் ஒரு குழுவாக வேலைபார்த்த அதிகாரிகள் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர். ஜென்யாவில் நடக்கும் தீவிரவாத ஆப்ரேஷனில் கலந்து கொள்கிறார்கள். அந்த நேரத்தில் முக்கிய தீவிரவாதி ஒருவனை குடும்பத்தோடு கொல்லும் சூழல் வந்து விடுகிறது. தீவிரவாதி மட்டும் தப்பித்து விடுகிறான். இதன் பிறகு விஜய்யின் மகனை விபத்தில் பழி கொடுக்கிறார்.
காலம் கடந்து விடுகிறது. நால்வரின் அமைதியான வாழ்க்கை நிம்மதி இழக்கிறது. விஜய்யோடு பணியாற்றிய அதிகாரிகள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். அவர்களை யார் கொல்கிறார்கள். என்பதை விஜய் கண்டுபிடிக்கிறார். இதுதான் ஆக்ஷன் காட்சிகளுக்கிடையே முழு திரைப்படமாக விரிகிறது,.
விஜய் அப்பா, மகன் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். விஜய்காந்த் முகத்தோடு அவர் அறிமுகமாகும் சண்டைக் காட்சியே அதிர வைக்கிறது. தொடர்ந்து மகனை தாய்லாந்தில் தொலைத்து விட்டு கதறும் போது, ரஷ்யாவில் மகனைப் பார்த்து காலில் விழும் இடத்திலும் மனதை கரைக்கிறார். சினேகாவுடன் சேட்டை, நண்பர்கள் பிரபு தேவா, பிரச்சாந்துடன் அலம்பல் என்று படம் முழுவது விஜய் டச்.
சின்ன வயதிலிருந்தே ஓவர் ஆக்டிங் பண்றான் என்று பிரச்சாந்தை கலாய்க்கும் இடத்தில் கைதட்டல். தேடுதல் வேட்டையில் மகனை நினைத்துக் கோபப்படும் விஜய் ரசிக்க வைக்கிறார். படம் முழுவதும் வியாபித்திருந்தாலும் ரசிக்க முடிகிறது.
சினேகா சில காட்சிகள், மீனாட்சி சௌத்ரி சில காட்சிகள் என்று பெண்களும் இருக்கிறார்கள். ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா நிறைவாக இருக்கிறார்கள். யோகிபாபு வரும் காட்சியில் கலகலப்பு.
மோகன் வில்லத்தனத்தை மனது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. படத்தில் இன்னும் சில சஸ்பென்ஸ்கள் இருக்கின்றன. அதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வதே நல்லது.
இயக்குனர் வெங்கட்பிரபு விளையாட்டுத்தனத்தோடு திரைக்கதை அமைத்து படத்தை யூத் புல்லாக கொண்டு போக முயற்சி செய்திருக்கிறார். அது கைகொடுத்திருக்கிறது.
ஆங்கிலப்படங்களின் சில காட்சிகளை உல்டா செய்து காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ரஷ்யாவில் ஆக்ஷன் காட்சி, க்ளைமேக்ஸ் காட்சி என்று கைதட்டல்களுக்கு பஞ்சமில்லாமல் படத்தை இயக்கியிருப்பது வெங்கட்பிரபுவிற்கு இயல்பாக வருகிறது. முதல்பாதியில் சீரியஸாக பல காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் கிரிகெட் ஸ்டேடியம், அம்மா, அப்பாவை குடோனில் கட்டி வைத்திருப்பது என்று பழைய படங்களின் சாயலில் தொய்வாக நகர்கிறது. இரண்டு
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. ஆனால் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா ரீ மிக்ஸ் கைதட்டல் பெறுகிறது. சித்தார்த் ஒளிப்பதிவு சிறப்பு
இயக்குனர் வெங்கட்பிரபு தன் சொந்தபந்தங்களை தவறாமல் எல்லா படங்களையும் பயன்படுத்துவதையும், கிரிக்கெட் மேனியாவையும் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கிராபிக்ஸ் காட்சிகள், விஜய்யின் மேக்கப் என்று படத்தில் உறுத்தலாக தெரிகிறது.
விஜய் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட பிரியாணி விருந்து வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.