தமிழ் சினிமா நடிகைகளில் தமன்னாவுக்கு மட்டும் எல்லா மொழிகளிலும் ரசிகர்களின் பெரிய ஆதரவு தொடர்ந்து இருந்து வருகிறது,.அதற்கு அவரது க்ளாமர் வேடங்களும், பளிச் தோற்றமும் என்றாலும் ஜெய்லர் படத்தின் பாடல் அவரை குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து ஆதரவைக் குவித்தது.
இதற்கு பிறகு இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரி உட்பட பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இதிலும் அவரது க்ளாமர் நடிப்பில் ரசிகர்கள் அதிக அளவில் சேர்ந்தார்கள். அப்படி இணையத்தொடரில் நடித்த போது அறிமுகமானவர் விஜய் வர்மா இருவருக்கும் நல்ல நட்பு உண்டாகி அது காதலாக மலர்ந்திருக்கிறது. இருவரும் பல்வேறு இடங்களில், விழாக்களில், சினிமா நிகழ்ச்சிகளில் என்று கைகோர்த்தபடி வலம் வந்தனர். பாலிவுட் , தமிழ் சினிமா, தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து சம்பளமும் அதிக அளவில் கிடைத்தது. இருந்தாலும் ஒரு கட்டத்தில் விஜய் வர்மாவோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற திட்டம் வைத்திருந்தார் தமன்னா.
அவருக்கு நடிப்பு மட்டுமல்லாமல் பிற தொழில்களிலும் முதலீடு செய்திருந்தார். அதில் சில தொழில் முதலீடுகள் வெளிநாடுகளில் இருந்தது. மும்பையில் தமன்னா ரியல் எஸ்டேட்டுகளில் பணம் பெரிய அளவில் முதலீடு செய்திருந்தார். கூடவே விஜய் வர்மா ஆலோசனையில் ஷேர் மார்க்கெட்டிலும் பங்களிப்பை செய்திருந்தார். இப்படி பல வழிகளிலும் தமன்னாவுக்கு வருமான வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் பொருளாதாரா சிக்கலில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதனை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் என்கிறார்கள். பொதுவாக பாலிவுட்டில் இருக்கும் நடிகர் நடிகைகள் பலருக்கு மும்பை அந்தேரி பகுதியில் சொந்தமாக சொத்து இருக்கும். அப்படி தமன்னாவுக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த வீடு பத்து கோடிகளுக்கும் அதிகமான மதிப்புடையது என்கிறார்கள். இந்த வீட்டை சமீபத்தில் வங்கியில் அடமானம், வைத்திருக்கிறார். எதற்காக திடீரென்று தமன்னா வங்கிக்கடன் வாங்கும் அளவுக்கு போயிருக்கிறார் என்று ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்ட முதலீடுகள் பெருமளவில் பல வருடங்களாக முடங்கிப்போயிருப்பதால் அவற்றை உடனே பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதனால் விஜய் வர்மாவோடு ஆலோசனையில் ஈடுபட்ட தமன்னா சில தவிர்க்க முடியாத சூழலில் இருந்த மீள மும்பை வீட்டை வங்கியில் வைத்து கடன் பெறுவது என்கிற முடிவுக்கு வருகிறார். அப்படித்தான் கடன் பெற்றிருக்கிறார் தமன்னா.
அதோடு சில மாதங்களில் விஜய் வர்மாவை திருமணம் செய்துகொள்ள தமன்னா திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஒரு கட்டம்தான் இந்த வங்கிக்கடன் பெறுவது என்கிறார்கள்.
தற்போது பாலிவுட்டில் முக்கிய திரைப்படங்களில் தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். எல்லாமே பிரமாண்டமான திரைப்பட ங்கள். அப்படியிருக்கையில் திடீர் திருமணம் திட்டம் என்பது ரசிகர்களின் கருத்துதான் மும்பையில் வேறு ஒரு இடத்தில் தனது கனவு இல்லத்தை தம்ன்னா கட்டி வருகிறார். அதற்கான பொருளாதார சேமிப்பைப் பெறத்தான் வங்கிக்கடன் பெற்ரிருக்கிறார் என்பது உன்மை என்கிறது மும்பை மீடியாக்கள்.