No menu items!

தமன்னாவின் காதலருக்கு அரிய வகை நோய்

தமன்னாவின் காதலருக்கு அரிய வகை நோய்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், தமன்னா. கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் விஜய், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டுள்ளார். அதே போல் பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமன்னாவை உலக அளவில் பிரபலமாக்கியது. கடந்த ஆண்டு தமன்னா நடித்த அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹிந்தியில் மட்டும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற Stree 2 உட்பட 3 படங்களில் நடித்தார்.

ரஜினி படத்தில் ரா ரா பாடலில் நடித்த பிறகு அவருக்கு இந்தியிலும் பெரிய அளவில் மார்க்கெட் உருவாகியிருக்கிறது.  பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்தபோது,   விஜய் வர்மாவுடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற படத்தில் நடித்தார்.அப்படத்தில் இருவரும் ரொம்ப நெருக்ககமாக பழகி வந்ததாக கூறப்பட்டது.

தற்போது கதையின் நாயகியாக     Odela 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஒரு பெண் சன்யாசி போல் நடிகை தமன்னா நடித்துள்ளார். இயக்குனர் அசோக் தேஜா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை கூட்டிய திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக, நடிகை தமன்னா தென்னிந்திய மொழிகளை விட பாலிவுட் படங்களில் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரி 2 என்கிற வெப் தொடரில் நடித்த போது, அதில் தனக்கு ஜோடியாக நடித்த, விஜய் வர்மாவை காதலிக்க துவங்கினார். இந்நிலையில் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா தனக்கு இருக்கும் அரிய வகை தோல் வியாதி பற்றி கூறியுள்ளார். சமீபத்தில் இவர் வலைத் தொடருக்கான விளம்பரத்தில் கலந்து கொண்ட போது…  தனக்கு இருக்கும் விடிலிகோ என்ற தோல் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். இது தமிழில் வெண்புள்ளி என்று அழைக்கப்படுகிறது. இது தொற்று நோய் அல்ல. இதனால் தனது முகத்தில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும், அவற்றை மறைக்க மேக்கப், அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றார். இந்த விஷயத்தில் முதலில் பயந்ததாகவும் விஜய் வர்மா கூறியுள்ளார்.

ஆனால் சினிமாவில் வெற்றி பெற்ற பிறகு இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்பதை நிப்பாட்டியதாக விஜய் வர்மா கூறினார். தமன்னா மற்றும் விஜய் வர்மா நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இந்த விஷயம் நீண்ட காலத்திற்குப் பிறகு வெளிப்பட்டது. பல பேட்டிகளில் இதை ஒப்புக்கொண்டனர். இந்த ஆண்டு விஜய் மற்றும் தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமன்னா முன்னணி நடிகையாக டோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தார். தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தும் இந்த அழகி, தமிழ் படங்களில் நடிப்பதில்லை. விஜய் வர்மாவைப் பொறுத்தவரை, ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த அவர் பாலிவுட்டில் பிரபலமானார். விஜய் வர்மாவின் இந்த நோய் கவலைபடும்படியான பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...