நடிகர் பிரேம், ஜி திருமணம் திருத்தணியில் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ நடந்து முடிந்திருக்கிறது. திருமணம் நடந்த கோவில் பகுதியில் சென்னை 28ல் நடித்த நடிகர்கள் தலைகள்தான் அதிகம் தெரிந்தது.
திருமண நாளுக்கு முதல் நாளே கங்கை அமரன் குடும்பத்தினர் சென்னையிலிருந்து திருத்தணிக்கு சென்று தங்கி விட்டனர். இளையராஜா குடும்பத்தின் சார்பாக கார்த்திக் ராஜா வந்திருந்தார். இளையராஜாவின் பிறந்த நாளன்று கங்கை அமரன் திருமண அழைப்பிதழை இளையராஜாவுக்கு கொடுத்தார் கங்கை அமரன்.
மணமகள் இந்து வங்கி அதிகாரியாக பணி புரிகிறார். அவருக்கு பிரேம்ஜி விலையுர்ந்த நகைகள் வாங்கிக் கொடுத்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக தாலிக்கு மட்டும் ஒரு கோடி செலவு செய்திருப்பதாக் கூறப்படுகிறது. இது இல்லாமல் மணமகளுக்கு இளையராஜா குடும்பத்தின் சார்பாக கார்த்திக் ஸ்பெஷலாக தங்க சங்கிலியை பரிசாகக் கொடுத்திருக்கிறார்.
திருமணம் முழுவதும் பிரேம்ஜியின் நண்பர்கள்தான் ஆக்கிரமித்திருந்தனர். கங்கை அமரன் எப்போதும் குஷி மூடில் இருப்பவர் ஆனால் அன்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். திருமணத்திற்கு காலையில் தாமதமாக வந்த வைபவ், பிரேம்ஜி தாலி கட்டும் காட்சியை எப்படிவதாவது பார்த்து விட வேண்டும் என்று கோவிலில் வாசலில் இருந்தே ஓட்டமும் நடையுமாக விரைந்தார். இதனை திரைப்படத்தில் தாலி கட்டும் நேரத்தில் ஓடிவரும் தந்தை போன்ற காட்சியை நினைவுபடுத்தியது. பின்னால் வந்த ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்.
திருமணம் முழுவதும் இயக்குனர் வெங்கட்பிரபுவின் ஆலோசனைபடி நடந்தது. முதல் நாள் இரவு தனியார் ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது,. அதற்கு திரையுலகினரும், குடும்பத்தினரும் அதிக அளவில் கலந்து கொண்டனர். அங்கு சிறிய அளவிலான இசைக் கச்சேரியும் நடைபெற்றது. இதில் பிரேம்ஜியும், மணப்பெண் இந்துவும் சேர்ந்து ’நேத்து ஒருத்தர ஒருத்தரு பார்த்தோம்..’ என்ற பாடலை பாடினார்கள். அந்த நேரம் நண்பர்கள் சந்தோஷ கூச்சலிட்டு கொண்டாடினார்கள்.
தாலி கட்டும் நாளில் புதுமணத்தம்பதிகளுக்கு தாமரைப் பூ மாலை அணிவிக்கப்பட்டது. ஆயிரம் தாமரை மொட்டுக்களுக்கு பதிலாக இதுதான்பா மாலை என்று கங்கை அமரன் அடித்த கமெண்டுக்கு சிரிப்பலை எழுந்தது.
ஜெய், வைபவ் அவ்வப்போது பிரேம்ஜியை கலாய்த்து ஏதாவது செய்து கொண்டேயிருந்தனர். திருமணம் ஏற்பாடுகள் நடக்கும் போதே தன்னுடைய நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்து குடும்பஸ்தனாக மாற இருப்பதை கொண்டாடினார் பிரேம் ஜி. நண்பர்கள் அவருக்கு திருமண நாளில் விலை உய்ர்ந்த பரிசு கொடுத்து தங்கள் நட்பை வெளிப்படுத்தினார்கள்;.
பணிகளுக்கிடையே இளையராஜா திருத்தணிக்கு வ்ரவில்லையென்றாலும். பிரேம்ஜியிடம் போனில் பேசி தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு தன் வீட்டில் வந்து சந்திக்கும்படி கூறியிருக்கிறார் இளையராஜா.
மனப்பெண் குடும்பத்தினர் குறித்து ஊடகங்களில் அதிக அளவிலான செய்திகள் வெளி வருவதை தவிர்க்க வேண்டும் என்றே வெங்கட்பிரபு கட்டுப்பாடாக வைத்திருந்தார் என்கிறார்கள்.