தமன்னா சினிமாவில் நடிக்க வந்து ஏறக்குறைய 18 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இத்தனை ஆண்டுகளில் அவர் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டியிருக்கிறார். ஆனால் நெருக்கமான காட்சிகளில் எல்லை மீறியது கிடையாது. இதழ் முத்தம் கொடுத்தது கிடையாது. மேற்குறிப்பிட்ட இந்த கொள்கை எல்லாம் திரையில்தான்.
ஆனால் இந்த கெடுபிடிகளை எல்லாம் இப்போது அப்படியே தூக்கி விஜய் வர்மா வீட்டு குப்பைத்தொட்டியில் தூக்கி கடாசி இருக்கிறார்.
’லஸ்ட் ஸ்டோரிஸ் -2’ வெப் சிரீஸில் இப்போது தமன்னாவும் அவரது டேட்டிங் நண்பர் விஜய் வர்மாவும்தான் நடித்து வருகிறார்கள். இதில் தமன்னாவுக்கு விஜய் வர்மா முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது.
இந்த முத்தக்காட்சியை ஷூட் செய்யும் போது, விஜய் வர்மாவிடம் தமன்னா தனது நோ கிஸ் பாலிஸியை பற்றி கூறியிருக்கிறார். இதைக் கேட்ட விஜய் வர்மா அந்த முத்தக்காட்சி முடிந்ததும், தமன்னாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்து இருக்கிறார்.
விஜய் வர்மாவுக்காகவே தமன்னா தனது கொள்கையை விட்டுக்கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். அது என்னவோ இருக்கட்டும் விஜய் வர்மா தமன்னாவுக்கு நன்றி சொன்னால், ரசிகர்கள் விஜய் வர்மாவுக்குதான் நன்றி சொல்லவேண்டும்.
அந்த ’முத்தம்’ அப்படி!
’கங்குவா’ இன்னொரு ’மகதீரா’!
’நான் ஈ’, ‘பாகுபலி’, ’ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு முன் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கியப்படம்தான் ‘மகதீரா’.
இந்தப்படம் தெலுங்கில் மெகா ஹிட். டப் செய்யப்பட்டு வெளியான போது ஹிந்தி, தமிழிலும் கூட நல்ல வரவேற்பைப் பெற்றது
இப்படத்தில் இந்த தலைமுறையான ராம் சரணுக்கும், காஜல் அகர்வாலுக்கு இடையே காதல் மலரும். அதற்கு பின்னணியில் சில நூற்றாண்டுகளுக்கு முன் அவர்களது முற்பிறவியில் இருக்கும் காதல் காரணமாக இருக்கும் என்று கதை நகரும்.
அதாவது தற்காலத்தையும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தையும் இணைக்கும் கதையாக இருக்கும். அதே போன்ற கதைதான் சூர்யா நடித்துவரும் ‘கங்குவா’ படத்தின் கதை என்கிறார்கள்.
நெருப்பின் நாயகனான கங்குவா எப்படி இறந்தார். அதற்கு என்ன காரணம் என்பதை தற்போதுள்ள சூர்யா கண்டறிவது போல கதைக்களம் இருக்கிறதாம்.
மகதீராவில் இரண்டு காலக்கட்டங்களுக்கும் ராஜமெளலி அதிக டீடெய்லிங்குகளை வைத்திருப்பார். ஆனால் ‘கங்குவா’வில் அப்படியெல்லாம் இல்லை. மிகவும் எளிமையாக, கதையோடு இணைவதுபோல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
அதேபோல் சென்டிமெண்ட்டில் பின்னியெடுக்கும் சிறுத்தை சிவா, ‘கங்குவா’ படத்தில் எமோஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார் என்கிறார்கள்.