வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பாலா இயக்கிய இந்தப் படத்தில் அருண் விஜய், ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதா ரவி, சிங்கம் புலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சிஎஸ் இருவரும் இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றனர். வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வணங்கான் திரைக்கு வர இருக்கிறது. அன்று தான் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லீ படமும் திரைக்கு வர இருக்கிறது.
வணங்கான் கதையில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தார். அதோடு, அந்தப் படத்தையும் அவர் தான் தயாரிக்க இருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருந்தார். ஆனால் கதையில் மாற்றம் தொடர்பாக சூர்யா மற்றும் பாலாவிற்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். இதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக ரோஷ்னி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், “2000 ஆம் ஆண்டு நெய்காகாரப்பட்டியில் படப்பிடிப்பு ஒன்றில் இருக்கும் பொழுது ஒரு அழைப்பு வந்தது சூர்யா நீ எந்த ஒரு படமும் கமிட் பண்ணிக்க வேண்டாம் நாம் அடுத்து படம் பண்ணுவோம் என்று சொன்னார். அந்த போன் காலை இன்று வரை என்னால் மறக்க முடியாது. அந்த அழைப்பு தான் என் வாழ்க்கையே மாற்றியது.
சேது படம் பார்த்த பிறகு அதில் இருந்து வெளி வருவதற்கு 100 நாட்கள் ஆகியது. அப்படி ஒரு படைப்பிற்கு பிறகு பாலாவின் அடுத்த திரைப்படத்தில் நான் கதாநாயகனாக இருப்பேன் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. என்னை நானே புரிந்து கொள்வதற்கு முன்பாக என்னை வைத்து திரைப்படம் இயக்க முன்வந்தவர் பாலா.
இரண்டாயிரத்தில் இந்த கால் வரவில்லை என்றால் நான் இந்த இடத்தில் கிடையாது. நந்தா படம் பார்த்து பின்பு தான் காக்க காக்க படம் ஜி கௌதம் வாசுதேவ் மேனன் வாய்ப்பு கொடுத்தார், காக்க காக்க பார்த்த பிறகுதான் ஏ ஆர் முருகதாஸ் கஜினி திரைப்படம் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
பாலா உறவுகளுக்கு மதிப்பளிக்க கூடியவர். அண்ணா என்று சொல்வது வெறும் வார்த்தை அல்ல அது பெரிய உறவு. எப்பவும் நிரந்தரமாக இருக்கின்ற அண்ணன் தம்பி உறவு கொடுத்த அண்ணா பாலாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றேன் 25வது ஆண்டு இன்று எல்லார் கூடவும் சேர்ந்து நானும் கொண்டாடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். மீண்டும் பேரன்பும் மறையாதைக்கு உரிய அண்ணன் இந்த பயணத்தை கொடுத்ததற்கு இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.