தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 1 வருடத்தில் நடக்கும் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இந்த அறிக்கை பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த அறிக்கைகள் சுற்றுச்சூழல், நகர வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துகின்றன.
4 அறிக்கைகள் எதைப் பற்றியது?
- தமிழ்நாட்டில் பழைய சுரங்கங்கள்
இந்த அறிக்கை மாநிலத்தில் கைவிடப்பட்ட மற்றும் மூடப்பட்ட சுரங்க இடங்களைப் பற்றி பேசுகிறது. இந்த நிலங்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க அல்லது மீண்டும் பயன்படுத்துவதற்கான வழிகளை இது பரிந்துரைக்கிறது. முக்கியமாக சுரங்கங்களை மீண்டும் செயல்படுத்துவது. இதன் மூலம் வருவாயை பெருக்குவது, அதன் மூலம் உற்பத்தியை பெருக்குவது போன்ற பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
- நகர வளர்ச்சி மற்றும் வெப்ப பிரச்சனைகள்
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் காலப்போக்கில் எவ்வாறு வெப்பமாகின்றன என்பதை இந்த அறிக்கை விளக்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வெப்பநிலை உயர்வு மற்றும் அது மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்க்கிறது. அதாவது ஒரு பகுதி நகரமாக முன்னேற்றம் அடையும் போது அங்கே போக்குவரத்து அதிகரிக்கும். மரங்கள் வெட்டப்படும். அதேபோல் சுற்றுசூழல் பாதிக்கப்படும் . இதன் காரணமாக நகரம் வேகமாக வெப்பமயமாகும். இதனால் மொத்தமாக அந்த பகுதியின் வெப்பநிலை பாதிக்கும்.
- குழந்தை ஊட்டச்சத்து
இந்த அறிக்கை குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளில் உள்ள முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்காட்டுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது பரிந்துரைகளை வழங்குகிறது. குழந்தைகளை எப்படி குறைபாடுகளில் இருந்து சரி செய்வது, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது என்று பரிந்துரைகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- சிறிய நகரங்களுக்கான இயற்கை சார்ந்த தீர்வுகள்
சிறிய நகரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையி இருக்கவும், காலநிலை மாற்றத்திற்கு எதிராக திட்டமிடலுடன் இருக்கவும், மரங்களை நடுதல், பசுமையான பகுதிகளை உருவாக்குதல் அல்லது சிறிய நீர் வழிகளை உருவாக்குதல் போன்ற இயற்கை முறைகளை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. முக்கியமாக பார்க்குகள், ஏரிகளை அமைப்பது தொடர்பாகவும் இதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 1 வருடத்தில் நடக்கும் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இந்த அறிக்கை பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த பரிந்துரைகள் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கைகள் சுற்றுச்சூழல், நகர வளர்ச்சி மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துகின்றன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (திட்டக் குழுவின் துணைத் தலைவர்), ஜே. ஜெயரஞ்சன் (செயல் துணைத் தலைவர்), கே. ஜோதி சிவஞானம் (ஆணைய உறுப்பினர்), எஸ். சுதா (உறுப்பினர் செயலாளர்), தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.