கோவிட்டுக்கு முன்பு வரை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்கள் அந்தந்த மொழி பேசும் மாநிலங்களில் வெளியாகும். எப்பொழுதாவது, ஏதாவது ஒரு படம் ஒரு மொழியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். உடனே அப்படத்தை டப் செய்து, மற்ற மொழி பேசும் சினிமா மார்க்கெட்டில் இறங்கிவிடுவார்கள். சினிமா வியாபாரத்தில் இது ஒரு வகை. சில சமயங்களில் அப்படத்தை மற்றொரு மொழி சினிமாவில் இருக்கும் நடிகர்கள், நடிகைகளை வைத்து அப்படியே ரீமேக் செய்து வெளியிடுவார்கள். இது சினிமாவில் மற்றொரு ரகம். இதுதான் சினிமாவில் இருந்துவந்த நடைமுறை.
ஆனால் கோவிட் சினிமா மார்கெட்டில் பல மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது. கோவிட்டினால் உண்டான பொது முடக்கமும், அதன் தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடியே வேலைப் பார்க்கும் புது அனுபவமும் மக்களிடையே சினிமா மீதான ரசனையை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தக்கட்டமாக இருக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் ஒடிடி தளங்களை அனைத்து தரப்பு மக்களிடையேயும் பிரபலப்படுத்திவிட்டன.
ஒடிடி-யில் அனைத்து மொழிப் படங்களையும், திரையரங்குகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லாமல், தங்களது வீட்டில் இருந்தபடியே, செளகரியமான நேரத்தில், நினைத்த போதெல்லாம் படம் பார்க்கும் வசதி உருவானதால் மக்களிடையே மொழி கடந்த சினிமா மோகம் அதிகரித்து இருக்கிறது. இன்று மொழிகள் வித்தியாசமில்லாமல், நல்லப் படங்களைத் தேடிப்பிடித்து பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
அதனால் தென்னிந்தியாவில் தமிழ்ப் படங்கள் மீது தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல், தெலுங்குப் படங்களுக்கு மற்ற தென்னிந்திய ரசிகர்களிடையே எதிர்பார்பு உருவாகி இருக்கிறது. மலையாள சினிமாவின் இயல்பான கதை, அருமையான திரைக்கதைக்கு தமிழ், தெலுங்கு, கன்னட ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. கன்னட படங்களான கேஜிஎஃப், காந்தாரா, இதர தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிர்வை உண்டாக்கி இருக்கின்றன.
இதனால் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தைக் கணக்கிடும் போது ஒரு மொழி படமாக இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை கணக்கிடுவது என்பது இப்போது வழக்கமாகி விட்டது.
அந்தவகையில் 2023-ம் ஆண்டில் தென்னிந்திய சினிமா நான்கு மாதங்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. இந்தாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் வெளியான படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தைப் பார்க்கலாம்.
திரையரங்குகளில் வெளியாகி, இருபது கோடிக்கும் மேல் வசூல் செய்த 15 படங்கள் மட்டும் இந்த பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டில் இடம்பிடித்திருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.
திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கும் படங்களின் வசூல் ஏப்ரல் வரையிலானது மட்டுமே. இதன் முழுமையான வசூல் நிலவரம் தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
1.வாரிசு
மொழி : தமிழ்
தயாரிப்பு செலவு : 175 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 46.32 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 302.4 கோடி
வெளிநாட்டு வசூல் : 88.5 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 213.9 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : சூப்பர் ஹிட்
2.பொன்னியின் செல்வன் – 2
(திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது)
மொழி : தமிழ்
தயாரிப்பு செலவு : 250 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 64.5 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 248.7 கோடி
வெளிநாட்டு வசூல் : 113.75 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 134.95 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : முழுமையாக தெரிய இன்னும் சில நாட்கள் பிடிக்கலாம்
3.வால்டர் வீரய்யா
மொழி : தெலுங்கு
தயாரிப்பு செலவு : 125 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 44.6 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 223.4 கோடி
வெளிநாட்டு வசூல் : 28.6 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 194.8 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : ப்ளாக் பஸ்டர்,
4.துணிவு
மொழி : தமிழ்
தயாரிப்பு செலவு : 125 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 39.6 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 201.9 கோடி
வெளிநாட்டு வசூல் : 57.2 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 144.7 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : ஹிட்
5.வீரசிம்ம ரெட்டி
மொழி : தெலுங்கு
தயாரிப்பு செலவு : 85 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 47.3 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 130.71 கோடி
வெளிநாட்டு வசூல் : 15.5 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 115.21 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : ஹிட்
6.தசரா
மொழி : தெலுங்கு
தயாரிப்பு செலவு : 65 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 38.65 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 118.5 கோடி
வெளிநாட்டு வசூல் : 21.2கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 97.3 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : சூப்பர் ஹிட்
7.வாத்தி
மொழி : தமிழ்
தயாரிப்பு செலவு : 40 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 14.85 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 116.5 கோடி
வெளிநாட்டு வசூல் : 24.65 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 91.85 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : ப்ளாக் பஸ்டர்
8.விருபாக்ஷா
திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது)
மொழி : தெலுங்கு
தயாரிப்பு செலவு : 35 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 11.85 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 75.4 கோடி
வெளிநாட்டு வசூல் : 11.5 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 63.9 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : தற்போதைய நிலவரப்படி ப்ளாக் பஸ்டர்
[13 நாட்கள் வசூல் நிலவரம்[
9.ரோமாஞ்சம்
மொழி : மலையாளம்
தயாரிப்பு செலவு : 3 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 0.48 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 67.8 கோடி
வெளிநாட்டு வசூல் : 22.5 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 45.3 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : ப்ளாக் பஸ்டர்
10.விடுதலை – 1
மொழி : தமிழ்
தயாரிப்பு செலவு : 20 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 4.5 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 53.5 கோடி
வெளிநாட்டு வசூல் : 8.7 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 44.8 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : ப்ளாக் பஸ்டர்
11.கப்ஸா
மொழி : கன்னடம்
தயாரிப்பு செலவு : 90 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 13.5 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 51.4 கோடி
வெளிநாட்டு வசூல் : 4.6 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 46.8 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : படுதோல்வி
12.க்ராந்தி
மொழி : கன்னடம்
தயாரிப்பு செலவு : 20 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 12.75 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 49.4 கோடி
வெளிநாட்டு வசூல் : 0 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 49.4 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : ப்ளாக் பஸ்டர்
13.பத்து தல
மொழி : தமிழ்
தயாரிப்பு செலவு : 35 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 8.2 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 37.3 கோடி
வெளிநாட்டு வசூல் : 4.5 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 32.8 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : ஆவரேஜ்
14.பாலகம்
மொழி : தெலுங்கு
தயாரிப்பு செலவு : 5 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 0.45 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 26.55 கோடி
வெளிநாட்டு வசூல் : 0.25 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 26.3 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : ப்ளாக் பஸ்டர்
15.ராவணாசுரா
மொழி : தெலுங்கு
தயாரிப்பு செலவு : 40 கோடி
முதல் நாள் வசூல் [உலகம் முழுவதும்] : 8.2 கோடி
ஒட்டுமொத்த வசூல்] : 24.9 கோடி
வெளிநாட்டு வசூல் : 2.7 கோடி
ஒட்டுமொத்த இந்திய வசூல் : 22.2 கோடி
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் : படுதோல்வி
இந்தாண்டில் இதுவரையில் வெளியான, இருபது கோடிக்கும் மேல் வசூலித்த இந்த 15 படங்களில் இரண்டுப் படங்கள் மட்டுமே படுதோல்வியை சந்தித்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வகையில் சினிமாவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து இருப்பதையே இந்த பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் காட்டுகிறது.
இனிவரும் எட்டு மாதங்களில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளீயாக இருப்பதால், இந்திய சினிமாவில் வசூலில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு அதிக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.