நடிகர் சித்தார்க் – அதிதிராவ் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடித்து முடிந்திருக்கிறது. திருமணத்திற்காக அதிதி ராவ் ஹைதாரி வீட்டிலிருந்து பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுவா ரசிகர்களுக்கு அதிதிராவ் பற்றி அவர் ஒரு நல்ல நடிகை என்கிற அளவில்தான் தெரியும். ஆனால் அவர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பது வெளியில் தெரிய வந்திருக்கிறது.
வனர்பதி ராஜ வம்சம், இவர்களின் வம்சம் என சொல்லப்படுகிறது. அதிதி ராவ்வின் மாமா, ஐதராபாத்தின் முதல்வராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிதியின் முன்னோர்களால் கட்டப்பட்ட, 400 ஆண்டுகள் பழைமையான ‘வனர்பதி’ கோயிலில் திருமணம் நடக்கும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இருவருக்கும் கோலாகலமாக முறையில் திருமணம் இருக்கிறது.
இந்த நிலையில் சித்தார்த் – அதிதி இருவருக்குமே இது 2 ஆம் திருமணம் என்பதை ரசிர்கள் பலரும் பகிர்ந்து வியப்புடன் பேசி வருகிறார்கள். சித்தார்த் பல ஆண்டுகளாக திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பெரிய இடத்தை அடைய முடியாமல் அவர் தேக்க நிலையில் இருகிறது அவரது சினிமா வாழ்க்கை.
நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவர் மேக்னா நாராயணன் என்பவரை 2003-இல் திருமணம் செய்து கொண்டார். இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து 2007 விவாகரத்து பெற்று விட்டார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தாவை காதலித்து வந்தார் சித்தாத் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர்கள் காதல் கை கூடவில்லை. என்று அப்போதைக்கு பேசப்பட்டது. அதிதி ராவை காதலித்து தற்போது நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.
நடிகை அதிதி ராவிற்கு தற்போது 37 வயதாகிறது. சித்தார்த்திற்கு, 45 வயதாகிறது. அதிதி ராவ், முதன் முதலில் சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு 21 வயதுதான். அப்போது அவர் திரையுலகிற்குள் நுழைந்து இருந்தாலும், பெற்றோர்கள் அவர்களாகவே பார்த்து இவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணம், 2013ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
இப்படி தங்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்குச் செல்லும் இரு கலைஞர்களும் நடிப்பில் கலக்குவார்கள் என்பதால் அவர்களுக்கு ரசிர்களும் பெரிய அளவில் இருக்கிறாகள். அதிதியை இன்ஸ்டாவில் தொடரும் ரசிகர்களுக்காகவே அவர் வீடியோவில் அடிக்கடி அவர்களுடன் உரையாடுவது வழக்கம்.
இந்த திருமண நிகழ்வில் பாலிவுட்டை சேர்ந்த முன்னணி நடிகர்களும், தமிழ் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அரசியல் பிரமுகர்களும் ஒன்றுகூட இருப்பதால் திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த திருமணமாக இது பார்க்கப்படுகிறது.