தேனி கண்ணன்
பாலிவுட் நடிகைகளில் பலர் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைவதை விட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெரிய அளவில் கல்லா கட்டுகிறார்கள். இந்த புகழைக்கொண்டு ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்டுவார்கள். அப்படி தனியார் நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி. சில ஆண்டுகளுக்கு முன் பொது நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை அணியாமல் அமர்ந்து இருந்த புகைப்படங்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் 16ல் ஷமிதா பரபரப்பைக் கிளப்பினார். தற்போது அக்கா ஷில்பா ஷெட்டியோடு மும்பையில் வசித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் ஷமிதாவுக்கு திடீரென்று உடல நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இது பெண்களுக்கு ஏற்படும் ஒருவகை பாதிப்பு என்கிறார்கள். கர்ப்ப பைக்கு வெளியே சதை வளர்ந்து இருப்பதையே எண்டோமெட்ரியோசிஸ் என்கிறார்கள். இது எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர்.
இந்த தகவலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் ஷமிதா ஷெட்டி. இந்த நோய் தனக்கு இருப்பது பற்றி அவர் ஒரு வீயோவாக பேசி பதிவிட்டு பெண்களை எச்சரிக்கை செய்துள்ளார். அதில், அனைத்துப் பெண்களும் தயவு செய்து இந்த பாதிப்பைப் பற்றி தேடி தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இது உங்களுக்கு இருப்பதை பற்றி வெளியே தெரியாது. எந்த அறிகுறியும் காட்டாது. அதனால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இந்த வகை நோயால் 40 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை என்னுடைய மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த பாதிப்பு பற்றி யாருக்கும் அதிகம் தெரிந்திருக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனக்கு வந்த இந்த நோயின் பாதிப்பை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்காமல் அனைத்து பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது வெளியில் பதிவிட்ட ஷமிதா ஷெட்டியை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இதே போலத்தான் நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டு, கடுமையான உடல் வலியை பொறுத்துக் கொண்டு பல மாதங்களாக நரக வேதனையை அனுபவத்து வருவதாகத் தெரிவித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மனிஷா கொய்ராலா மம்தா மோகந்தாஸ் சி புற்று நோய்க்கு கிச்சை எடுத்துக் கொண்டதையும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்கள்.
இப்படிச் செய்வதன் மூலம் ரசிகர்களு உண்மை நிலையை வெளிப்படுத்தி அது போன்ற மருத்துவ பாதிப்பின் தாக்கத்திலிருந்து அவர்களை தப்பிக்க வைக்கலாம் என்ற நல்ல எண்ணத்தையே காட்டுகிறது. சாமனியர்களுக்கு இது போன்ற பாதிப்பு வந்தாலும் பதட்டமடையாமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கும் அவர்களை தயார் படுத்தவும் இந்த எச்சரிக்கை பயன்படும்.