No menu items!

அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக குடியேறியவர்களுக்கு கல்தா!

அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக குடியேறியவர்களுக்கு கல்தா!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அந்நாட்டு ராணுவ விமானம் ஒன்று இந்தியா புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விமானம் எப்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. எப்போது இந்தியா வந்து சேகிறது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை.

இந்நிலையில் இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.

புள்ளிவிவரங்களின்படி சுமார் 18,000 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசிப்பதாகத் தெரிகிறது. மொத்தமாக அமெரிக்காவில் 10.5 லட்சம் பேர் சட்டவிரோதமாக வசிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கோஷத்தை எழுப்பியே டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். அதற்குப் பெரும் வரவேற்பு நிலவியது. அதுவே டொனால்டு ட்ரம்ப் வெற்றிக்கு வழி வகுத்தது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் அதிகளவு சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்தியர்களும் பெரும் பங்கு வகிப்பதாக அந்நாட்டு தரப்பில் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் கூட “ஓர் அரசாங்கமாக அமெரிக்காவின் முடிவை ஆதரிக்கிறோம். அமெரிக்காவில் உள்ள சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தான், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அந்நாட்டு ராணுவ விமானம் ஒன்று இந்தியா புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

7,000-க்​கும் மேற்​பட்ட இந்திய மாணவர்கள்: அமெரிக்க பல்கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​களில் வெளி​நாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்​கப்​படு​கிறது. இதேபோல கல்வி சுற்றுலா வரும் வெளி​நாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்​கப்​படு​கிறது.

இந்தியா, சீனா, பிரேசில், கொலம்​பியா நாடு​களில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்ட​விரோதமாக தங்கி உள்ளனர். இதில் மிக அதிகபட்​சமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 7,000-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யிருக்​கின்​றனர். எச்1பி விசா பெற்றும் அமெரிக்​கா​வில் பணியாற்றும் வெளி​நாட்​டினரும் விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...