மலையாள சினிமாவில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கும் செக்ஸ் குற்றச்சாட்டு இன்று சினிமாவை முடக்கிப் போட்டிருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த இருட்டு அறையில் முரட்டு சம்பவங்களை நினைத்து முன்னணி நடிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். இந்த சம்பவங்கள் தொடர்ந்து வெளிவரக் காரணமாக இருப்பது சொன்னபடி அந்த பெண்களுக்கு சினிமா வாய்ப்புகளை உருவாக்கித் தராததுதான் என்கிறார்கள் கேரளா திரையுலகைச் சேர்ந்தவர்கள் தகுந்த பட வாய்ப்புகள் கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் சம்மந்தப்பட்ட நடிகர்களை பழி வாங்க தருணம் பார்த்து காத்திருந்தார்கள். அவர்களுக்கு துணையாக டபிள்யூ.சி.சி. அமைப்பு கிடைத்ததும் இப்போது ஒவ்வொருவராக புறப்பட்டு விட்டார்கள் என்ற தகவல் சொல்கிறர்கள்.
ஆனால் அன்று இளரத்தமாக இருந்த நடிகர்கள் பலரும் இன்று வயது முதிர்ந்த காலத்தில் தங்கள் மனைவி, குழந்தைகள் அவர்களின் திருமண வாழ்க்கை என்று செட்டிலாகும் வேலையில் இந்த பிரச்சனை பூதமாக வந்து மிரட்டி வருகிறது.
இந்த நடிகர்கள் வரிசையில் பிரபல நடிகர் முகேஷும் ஒருவராக இருக்கிறார். அவர் மீதும் நடிகைகள் குற்ற்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள். இந்த முகேஷ் வேறு யாருமல்ல நடிகை சரிதாவின் முன்னாள் கணவர். நடிகைகள் இவர் மீது செக்ஸ் புகார் கொடுப்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அவரது முன்னாள் மனைவியான சரிதா தன் கணவரிடம் தான் அனுபவித்த கொடுமைகளை பட்டியலிடத் தொடங்கியிருக்கிறார். இதனால் முகேஷிற்கு இக்கட்டான சூழல் ஏறப்ட்டிருக்கிறது. சரிதா கூறியிருப்பதாவது…
இதையெல்லாம் வெளியே சொல்ல நான் வெட்கப்படுகிறேன். முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் அப்படி எனக்கு நடக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை. முகேஷால் நான் அனுபவித்த கொடுமைகள் குறித்து மீடியாவில் நான் இதுவரை சொன்னதில்லை. முதன்முறையாக சொல்கிறேன். ஒரு முறை ஓணம் பண்டிகை வந்தது. அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். பண்டிகை என்றாலே எல்லோரும் சந்தோஷமாக தான் இருப்போம். ஆனால் அந்த டைம்ல கூட முகேஷ் என்னுடன் சண்டை போட்டு என் வயிற்றிலேயே எட்டி உதைத்தார். அப்போது வலியால் நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அதைப்பார்த்து நீதான் நல்ல நடிகையாச்சே நல்லா நடிக்கிறாய் என்று சொல்லி சிரித்தார். அவர் எப்போ எப்படி இருப்பார் என்று சொல்லவே முடியாது.
ஒருநாள் இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது ஏன் லேட்டா வந்தீங்கனு கேட்டேன். அதற்கு என் தலைமுடியை பிடித்து தரையில் தள்ளிவிட்டு அடித்தார். அதன்பின்னர் அவர் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் ஒரு நாள் முகேஷின் தந்தை என்னை பார்க்க வீட்டுக்கு வந்தார். அவர் என் கையை பிடித்து முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை என கூறி அழுததோடு, அவரைப்பற்றி யாரிடமும் வெளியே சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கினார். இதனால் அவர் உயிருடன் இருந்தவரை அதை வெளியில் சொல்லவில்லை” என சரிதா கூறி இருக்கிறார்
இப்போது தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருப்பது கேரளா அரசும், நடிகர்கள் மீது அளப்பரிய பாசம் வைத்திருந்த ரசிகர்களும்தான். பெரும் புகழோசு இருக்கும் கலைஞர்கள் தங்கள் திறமைகளுக்காக பத்ம விருதுகளும், சிறந்த நடிகர்களுக்கான அங்கீகாரமும் பெற்றிருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் ஏற்படும் களங்கத்தால் விருதுகளை அரசு திரும்பப்பெறுமா என்ற கேள்வி எழுகிறது.