நடிகர் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டு இருந்தார். அதுதான் இப்போது இணையத்தில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமண போட்டோக்களை நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும், தனது மருமகளை குடும்பத்தில் வரவேற்றும் ட்வீட் செய்து இருந்தார். அதில் அவர், “சோபிதாவும் சைதன்யா அழகான அத்தியாயத்தைத் தொடங்குவதைப் பார்க்கும் போது உணர்ச்சிகரமாக இருக்கிறது. அன்புள்ள சோபிதா.. ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் நீ மகிழ்ச்சியைக் கொண்டு வந்துவிட்டாய்” என்று பதிவிட்டு இருந்தார். அவரது ட்வீட் இணையத்தில் டிரெண்டானது.
தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா சோபிதா துலிபாலாவுடன் திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமந்தா ஒரு இன்ஸ்டா ஸ்டோரியைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான வயோலா டேவிஸ் முதலில் வெளியிட்ட வீடியோவை சமந்தா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு சிறுமி தனது எதிரியான சிறுவனுடன் சண்டையில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. சிறுவன் அழுது கண்ணீர் சிந்த, சிறுமி சண்டையில் வெற்றி பெறுவதுடன் வீடியோ கிளிப் முடிகிறது. (ஒரு பெண்ணைப் போல சண்டையிடுங்கள்) என்ற ஹேஷ்டேக்குடன் சமந்தா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அவரது முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு மறைமுகமான எதிர்வினையா என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
தனது மன வலியை மறைத்து சமந்தா இணையத்தில் அதை மறைமுகமாக பதிவிடுகிறாரோ என்று பேசி வருகிறார்கள். இன்னொரு பக்கம், புஷ்பா 2 படம் பெரிய வெற்றியை பெற்று வசூலை அள்ளினாலும் சமந்தா ஆடியா ஓ சொல்றியா பாடலைப் போல ஸ்ரீ லீலா ஆடிய பாடல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்ற பேச்சு ஒரு பக்கம் எழுந்து அந்த பாடலைப் பகிர்ந்துச் சமந்தாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.