‘சாணி காயிதம்’ அமேசான் ப்ரைமில் ரீலிசாகிவிட்டது. செல்வராகவனும் கீர்த்தி சுரேஷும் இணைந்து நடிப்பதால் அதிக கவனத்தைப் பெற்றிருக்கிறது. முதல் படமான ‘ராக்கி’யில் இம்ப்ரஸ் செய்த இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம் இது.
கதை நடப்பது 1979-ல். போலீஸ் கான்ஸ்டபிளான கீர்த்தி சுரேஷின் கணவர் ஒரு மில்லில் வேலை பார்க்கிறார். அந்த மில்லின் உரிமையாளர், உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கீர்த்தி சுரேஷின் கணவரை கேவலமாக நடத்துகிறார். ஒருகட்டத்தில் அவரை கீர்த்தி சுரேஷின் கணவர் எதிர்த்து கேட்க, முதலாளி கோபமாகிறார்.
கீர்த்தி சுரேஷின் கணவர் மற்றும் குழந்தையை நண்பர்களுடன் சேர்ந்து மில் முதலாளி கொல்கிறார். அந்த கும்பல் கீர்த்தி சுரேஷிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இந்த கும்பலை தனது சகோதரர் செல்வராகவனுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் பழிவாங்குவதுதான் கதை.
பழிவாங்கும் கதைதான் அதற்காக இத்தனை வன்முறைக் காட்சிகளா?
படம் முழுக்க கெட்ட வார்த்தைகள். அதுவும் கீர்த்தி சுரேஷ் கெட்ட வார்த்தைகள் பேசுவது கொஞ்சம் அதிர்ச்சியைத் தருகிறது. அந்த ஆவேச நடிப்பு இதுவரை கீர்த்தியிடம் பார்த்திராதது. பாராட்டத்தக்கது.
செல்வராகவனும் அமைதியாக ஸ்கோர் செய்கிறார். ஆனால், அவருக்கு ஏற்றது இயக்குநர் பணிதான்.
சாம் சி.எஸ்.ன் பிஜிஎம் இசையில் க்ரைம் திரில்லருக்கு பொருத்தம். ஒளிப்பதிவும் கதையை புரிந்திருக்கிறது.
‘ராக்கி’ படத்தில் ஒரு ஆண் பழிவாங்குவதாக கதைசொன்ன இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இதில் ஒரு பெண் பழிவாங்குவதாக எடுத்துள்ளார்.
சாணி காயிதம் – ரத்த காயிதம்.