No menu items!

ஏசி இல்லாத அறைகள்… இந்தியாவில் இருந்து நாய்கள் – பாரிஸ் ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்

ஏசி இல்லாத அறைகள்… இந்தியாவில் இருந்து நாய்கள் – பாரிஸ் ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. பாரிஸ் நகரில் நடக்கும் 3-வது ஒலிம்பிக் போட்டி இது. அதானாலேயே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்கிறது பிரெஞ்சு அரசு. தங்களுக்கே உரிய வகையில் இந்த ஒலிம்பிக்கில் பல புதுமைகளைப் புகுத்தி உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிய சில சுவாரஸ்யம்னான தகவல்கள்.

நதியில் நடக்கும் தொடக்க விழா

பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாக்கள் பிரம்மாண்டமான ஸ்டேடியங்களில்தான் நடைபெறும். ஆனால் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா பாரிஸ் நகரில் உள்ள ஸீன் நதியில் நடைபெற உள்ளது. இந்த நதி பாரிஸ் நகரின் மையப் பகுதியில் ஓடுகிறது. இந்த தொடக்க விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட படகுகள் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரவுள்ளன. ஸீன் நதியில் நடைபெறும் தொடக்க விழாவில் படகில் அந்தந்த நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்த உள்ளனர். இந்தியா சார்பாக தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணிக்கு தலைமை தாங்குகின்றனர்.

45 ஆயிரம் பேர் பாதுகாப்பு

ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 45 ஆயிரம் பாதுகாப்பு படை வீர்ர்கள் பாரிஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணிகளுக்காக இந்தியாவில் இருந்து 10 நாய்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிற ப்பு விமானத்தில் அந்த நாய்கள் பாரிஸ் நகருக்கு பறந்துள்ளன.

ஏசி இல்லாத தங்கும் அறைகள்

பசுமையான ஒலிம்பிக் போட்டியாக இந்த ஒலிம்பிக்கை நடத்த போட்டி அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். கரியமில வாயுவை அதிகம் வெளியிடாத வண்ணம் போட்டியை நடத்துவதே அமைப்பாளர்களின் குறிக்கோள், அதற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பல்வேறு நாட்டு வீர்ர்களும் தங்கியிருக்கும் அறைகளில் ஏசி வசதிகள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாதபோதும் வீர்ர்களின் அறைகள், வெளிப்புறத்தின் வெப்ப அளவைவிட 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவாக இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக சூரி ஒளி அதிகம் வெம்மை தராத விதத்தில் ஒலிம்பிக் கிராமத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பு பணியில் செயற்கை நுண்ணறிவு

போட்டிகளில் பங்கேற்கும் வீர்ர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மொழிப் பிரச்சினை இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பிரெஞ்சு அரசு தற்காலிகமாக நியமித்துள்ளது. இந்த பணியாளர்கள் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட கருவியுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படுவார்கள். அந்த செயற்கை நுண்ணறிவு கருவி, 16 மொழிகளை பிரெஞ்சுக்கு மொழிபெயர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சம உரிமை:

ஒலிம்பிக் போட்டிகளில் 1900 ஆண்டுவரை பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த நூற்றாண்டில்தான் முதல் முறையாக பெண்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட்து. இந்த நிலையில், ஆண்களும் பெண்களும் சம அளவில் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியாக இந்த ஒலிம்பிக் இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 5,250 வீர்ர்களும், 5,250 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

அறிமுகமாகும் புதிய விளையாட்டு:

இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பிரேக்கிங் (பிரேக் டான்ஸிங்) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யூத் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது முதல் முறையாக முதன்மை ஒலிம்பிக் மேடையில் இவ்விளையாட்டு இடம் பெறுகிறது.

1 கோடி டிக்கெட்கள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக சுமார் 1 கோடி டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. 2016 ரியோ ஒலிம்பிக், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒப்பிடும்போது, இது 20 லட்சம் அதிகமாகும். . அதிகபட்சமாக ஆடவர் 100 மீட்டர் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் இந்திய மதிப்பில் 90 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...