No menu items!

சாய் பல்லவி வாய்ப்புகளை மறுக்க காரணம்

சாய் பல்லவி வாய்ப்புகளை மறுக்க காரணம்

கொஞ்ச நாட்களாகவே சாய் பல்லவி தன்னைத்தேடி வரும் வாய்ப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. யார் கேட்டாலும், எந்த பதிலும் சொல்வதில்லை என்கிறார்கள்.

இதற்கு காரணம், தான் படித்த டாக்டர் தொழிலுக்கே போய்விடலாம். கோயம்புத்தூரில் சொந்தமாக ஒரு ஹாஸ்பிடலை கட்டி அங்கேயே டாக்டராக வாழ்க்கையைத் தொடரலாம் என்று விரும்புவதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

இப்பொழுது மற்றுமொரு செய்தியும் அடிபடுகிறது. அதாவது சாய் பல்லவியும் பாலிவுட்டுக்கு போகிறார். மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டி உருவாக இருக்கும் ‘ராமாயணா’ படத்தில் சீதாவாக நடிக்க சாய் பல்லவியைக் கேட்டிருக்கிறார்களாம். ரன்பீர் கபூர் ராமராக நடிக்க இருக்கிறார்.

ஆரம்பத்தில் சீதாவாக திபீகா படுகோனும், ராமராக ஹிர்த்திக் ரோஷனும்தான் நடிப்பதாக இருந்ததாம். அதில் மாற்றம் வரவே இப்போழுது சீதாவாக நடிக்க சாய்பல்லவியை அணுகியிருக்கிறார்கள்.

’ராமாயணா’ ஷூட்டிங் 2023-ல் ஆரம்பிக்க இருக்கிறது. இப்படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் தேவைப்படுவதால், வேறெந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் சாய் பல்லவி. சம்பளமும் அதிகம். பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கலாம் என்று சாய் பல்லவி நினைக்கிறாராம்.


காம்ப்ரமைஸ் வந்தால் என்ன செய்வீர்கள் – கீர்த்தி சுரேஷ்

வாய்ப்புகளுக்காக படுக்கையைப் பகிர்வது அல்லது உடல்ரீதியாக தொந்தரவு கொடுப்பது போன்ற பிரச்சினைகள் எல்லா துறைகளிலும் இருக்கிறது. ஆனால் சினிமா துறை மட்டுமே அதிகம் ஃப்ளாஷ் ஆவது வழக்கம்.

காம்ப்ரமைஸ், காஸ்ட்டிக் கெளச் [Casting couch] பற்றி கேட்டால் கீர்த்தி சுரேஷ் இப்போது ஒரு லெக்சரே அடிக்கிறார்.

‘’என் கூட சேர்ந்து படங்கள் பண்றவங்கள்ல பல பேர் தங்களோட அனுபவத்தை பகிர்ந்து இருக்காங்க. எப்படியெல்லாம் பாலியல் தொந்தரவு கொடுத்தாங்கன்னு என்கிட்ட வெளிப்படையாவே சொல்லியிருக்காங்க.

எனக்கு அப்படியொரு அனுபவம் எதுவும் இதுவரை இல்ல.  என்னை எல்லோருக்கும் நல்லா தெரியும். யாரும் என்னை தவறாக புரிஞ்சுக்க மாட்டாங்க. இதுவரைக்கும் அப்படி யாரும் எதுவும் சொல்லல. இனி எதிர்காலத்திலயும் நடக்க வாய்ப்பு இல்ல.

ஏதாவது ஒரு தப்பான ப்ரபோசலுடன் யாராவது வந்தால், நான் ஏத்துக்கமாட்டேன். எனக்கு அப்படியொரு வாய்ப்பு தேவையும் இல்ல. ரொம்ப தொந்தரவு கொடுத்தா இந்த சினிமா இண்டஸ்ட்ரியை விட்டே போயிடுவேன். வேற வேலை தேடி பொழச்சிப்பேன்’ என்று உறுதியாக சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.


’முத்து’வை அடித்து தூக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’

ஜப்பான் பாக்ஸ் ஆபிஸின் முடிசூடா மன்னனாக ஏறக்குறைய 24 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தியவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவரது ‘முத்து’ படம் அங்கே ஜப்பானியர்களால் மிக அதிகம் கொண்டாடப்பட்ட இந்தியப் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.

முத்து படம் அங்கே வெளியானதும்தான், இந்தியப் படங்களுக்கென அங்கே பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனால் அவ்வப்போது இந்தியப் படங்கள் அங்கே வெளியாகி வந்தன.

ஆனால் இதுவரையில் ரஜினியின் ‘முத்து’ படத்தின் வசூலை வேறெந்த படமும் தொடக்கூட முடியவில்லை. ஆனால் 24  வருடம் கழித்து ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் வசூலில் முத்துவை முந்தியிருக்கிறது. ஜப்பானிய பாக்ஸ் ஆபிஸில்400 மில்லியன் ஜப்பான் யென்களை வசூலித்திருக்கிறதாம்.

இது ஒரு பக்கமிருக்க, இந்தப் படத்திற்கு லாஸ் ஏஞ்சலஸ் ஃப்லிம்ஸ் க்ரிட்டிக்ஸ் அசோசியேஷன் ஒரு விருதை அறிவித்திருக்கிறது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிக்கு பெஸ்ட் மியூசிக் /  ஸ்கோர் பிரிவில் விருதை வழங்கி கெளரவித்திருக்கிறது Los Angeles Films Critics Association [LAFCA].

இந்த விருது, கலெக்‌ஷன் எல்லாம் அதிர்ஷ்டத்தில் வரவில்லை. ராஜமெளலியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. படமெடுத்து வெளியிட்டுவிட்டால் வேலை முடிந்தது என்று கழன்று கொள்ளும் நடிகர்கள், இயக்குநர்கள் மத்தியில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ப்ரமோஷனுக்காக இப்பொழுதும் ஜப்பான், அமெரிக்கா என பறந்தபடி இருக்கிறார். ராஜமெளலி டீமின் ப்ரமோஷனும், லாபியிங்கும் இன்னும் தொடர்வதால் இன்னும் பல விருதுகள் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இதை நம்மூர் ஹீரோக்களும், டைரக்டர்களும் பின்பற்றினால் உழைப்புக்கு ஏற்ற விருதுகள் கிடைக்கும். அங்கீகாரமும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...