No menu items!

வேகமாக பரவும் இன்புளூயன்சா… கட்டுப்பாடுகளை வெளியிட்ட அரசு!

வேகமாக பரவும் இன்புளூயன்சா… கட்டுப்பாடுகளை வெளியிட்ட அரசு!

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. அதற்குள் புதிதாக இன்புளூயன்ஸா வைரஸ் வந்து மக்களை பயமுறுத்தி வருகிறது.

பன்றிக் காய்ச்சலின் ஒரு வகைதான் இந்த Influenza A H3N2. இந்த வைரஸ், விலங்குகள் வழியாக மனிதர்களைத் தாக்கி, பின்னர் மனிதர்கள் மூலம் சக மனிதர்களுக்கு தொடுதல், தும்மல், முத்தமிடுதல், சளி போன்றவற்றால் பரவி வருகிறது. 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல், தொண்டை வலி, விடாத வறட்டு இருமல், குமட்டல் மற்றும் வாந்தி, உடல்வலி, சோர்வு, தலைவலி ஆகியவை இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள்.

ஐசிஎம்ஆர் நடத்தியுள்ள ஆய்வுகளின்படி எதிர்ப்புசக்தி குன்றைவாக உள்ள குழந்தைகள், முதியோர் மற்றும் இணை நோய்கள் இருப்பவர்களை இந்த வைரஸ் தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக சாதாரண காய்ச்சல் மற்றும் இருமல் சுமார் 3 நாட்களில் குணமாகி விடும். ஆனால் இந்த வகை இன்புளூயன்ஸா வைரஸ் தாக்கினால், 7 நாட்கள் வரை பாதிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு காய்ச்சல் விட்டாலும் 3 வாரங்கள் வரை இருமல் நீடிக்கும்.

இன்புளூயன்ஸா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. உச்சகட்டமாக புதுச்சேரி அரசு 8-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்…

மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

ப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 7 நாட்கள் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து எடுக்க வேண்டும். தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும்.

லேசான காய்ச்சல், இருமல் பாதிப்பு கொண்டவர்கள் ஏ வகை. தீவிர காய்ச்சல் அதிக இருமல் கொண்டவர்கள் பி வகை என கருதப்படுவார்கள்.

தீவிர காய்ச்சல் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர், இணைநோய் இருப்போர் என 2 வகைகளில் இருப்பவர்களுக்கு இன்புளூயன்சாவுக்கான பரிசோதனையோ, மருத்துவமனை அனுமதியோ தேவையில்லை. இவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தால் போதுமானது.

அதேவேளை சி வகை பாதிப்பான தீவிர காய்ச்சல், தொண்டை வழி, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த குறைவு இருந்தால் மட்டும் இன்புளூயன்சா வைரசுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் இந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் 104 மற்றும் 108 ஆகிய 2 எண்களை தொடர்பு கொண்டு இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள், ஆலோசனை மருத்துவ பெறலாம்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணி புரிவோர், ஆய்வங்களில் பணி புரிவோர் கட்டாயம் என்95 முகக்கவசம் அணிய வேண்டும். மற்றவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய் உள்ளோரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

65 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள், 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ப்ளூ தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது.

– இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...