ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதோடு பிரிவுக்கு என்ன காரணம்? என்பது பற்றி சாய்ரா பானு – ஏஆர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் மூலம் கூட்டு அறிக்கையாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
” சாயிரா பானு, அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் வந்தனா மற்றும் அவரது அசோசியேட்ஸ் சார்பில் இந்த கூட்டு அறிக்கை வெளியிடுகிறது. திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு மற்றும் அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளனர். உணர்ச்சிகரமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொரும் ஆழமாகவும் நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிந்துள்ளனர்.
இந்த இடைவெளியை இணைக்க யாராலும் பாலம் போல் செயல்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் எடுத்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனியாக சாய்ரா பானு அவர்கள் சார்பில் வழக்கறிஞர் கொடுத்த அறிக்கையில் “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் திரு. ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை தான் எடுத்துள்ளதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார் சாய்ரா. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாக்கியுது என்றும் கூறப்படுகிறது. மேலும் பேசிய சாய்ரா, மிகுந்த வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சாய்ரா வெளியிட்ட பதிவில் இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் தங்களுக்கான தனிமையை கொஞ்சம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர்.
ஒரு நேர்காணலில் பங்கேற்ற ரகுமான் தனது திருமணம் குறித்து பேசுகையில், “திருமணத்தை பற்றிய யோசனை அப்போது எனக்கு இல்லை. எனக்கென்று ஒரு பெண்ணை தேடி செல்லவும் அப்போது தோணவில்லை. ஆகவே என் அம்மா பார்த்த பெண்ணை நான் திருமணம் செய்துகொண்டேன். .உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், எனக்கென மணப்பெண்ணைத் தேடிச் செல்ல எனக்கு நேரமில்லை. நான் ரங்கீலா, பம்பாய் போன்ற படங்களில் பிசியாக பணி செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் செய்துகொள்ளலாம் என்று தோன்றியது. என் அம்மாவிடம் பெண் பார்க்க சொன்னேன். அப்படி நடந்தது தான் எங்கள் திருமணம்” என்றார் அவர்.