No menu items!

பிஸி நடிகையான ப்ரியாமணி

பிஸி நடிகையான ப்ரியாமணி

சினிமாவில் ஒரு சிலருக்குதான் சில அதிர்ஷ்டங்கள் அடிக்கும். அது கொஞ்சம் காலம் கடந்த அதிர்ஷ்டமாக இருக்கும். அப்படி இருந்தாலும், அதற்கான மதிப்பு அமோகமாக இருக்கும். அப்படியொரு அதிர்ஷ்டம்தான் இப்போது ப்ரியாமணிக்கு அடித்திருக்கிறது.

ப்ரியாமணி கதாநாயகியாக அறிமுகமாகி, விருதுகள் வென்ற பிறகும் கூட அவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குறைவாகவே வந்தன.

இதனால்தான் சினிமா இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வயது எகிறிக்கொண்டே போவதால், குடும்ப வாழ்க்கையிலாவது செட்டிலாகி விடலாம் என திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்தவருக்கு சுக்ரன் கொஞ்சம் தாமதமாக தனது கரிசனத்தைக் காட்டியிருக்கிறார் போலும்.

இப்போது இவருக்கு வாய்ப்புகள் அதிகமாகி இருக்கின்றன. திருமணமாகி வீட்டில் குடும்பத்தைப் பார்த்து கொண்டவருக்கும், ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போடும் வாய்ப்பை அளித்தது பாலிவுட்.

’சென்னை எக்ஸ்ப்ரஸ்’ பட த்தில் ஷாரூக்கானுடன் ப்ரியாமணி ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடினார். அதற்குப் பிறகும் கூட உடனே வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் ஒடிடி வெப் சீரிஸ்களில் நடிக்க வாய்ப்பு வந்தன. அதை கச்சிதமாக பிடித்து கொண்டார்.

இதனால் அவருக்கு மீண்டும் ஷாரூக்கானுடன் ;ஜவான்’ படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்தது. அடுத்து ’ஆர்ட்டிக்கிள் 370’ படத்தில் பிரதமர் அலுவலக இணை செயலாளர் கதாபாத்திரம், ‘மைதான்’ பட த்தில் அஜய் தேவ்கனுடன் நடிக்கிறார். இப்படி வாய்ப்புகள் இரண்டாவது இன்னிங்ஸில் படவாய்ப்புகள் வருவதால் உற்சாகமாகி இருக்கிறார் ப்ரியாமணி.

ஆனாலும் தமிழ் சினிமா பக்கம் யாருமே தன்னை நடிக்க கூப்பிடவில்லை என்ற வருத்தல் ப்ரியாமணிக்கு அதிகமிருக்கிறதாம். சம்பளத்தைக் குறைத்து கொண்டு நடிக்க தயார் என ஆடித்தள்ளுபடி பாணியில் சலுகைகளையும் கொடுக்க எண்ணத்தில் இருக்கிறாராம் ப்ரியாமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...