No menu items!

’புஷ்பா’ ஃபயர் இல்லை. ஃப்ளாப் – டோலிவுட் வைரல்

’புஷ்பா’ ஃபயர் இல்லை. ஃப்ளாப் – டோலிவுட் வைரல்

’ஊ சொல்றீயா மாமா ஊஊ சொல்றீயா’ என இளசுகளை முணுமுணுக்க வைக்குமளவிற்கு சமந்தாவின் ஹாட்டான ஆட்டம். ‘ஏ சாமி’ என கிறங்கடித்த ராஷ்மிகா மந்தானா. ‘புஷ்பான்னா ஃப்ளவர் இல்லடா..ஃபயர்’ என கர்ஜித்த அல்லு அர்ஜூன். இப்படி பல அம்சங்களால் பான் – இந்தியா படமாக பரபரப்பை கிளப்பிய படம் ’புஷ்பா’.

வசூலை அள்ளிக்குவித்த படம் என ‘புஷ்பா’வை இந்திய இளசுகள் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருக்க, ‘புஷ்பா’ ஃப்ளவர் இல்ல ஃப்ளாப்’ என்று அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் தேஜா.

தெலுங்கு சினிமாவில் 20 வருடங்களாக இருந்து வரும் இயக்குநர் தேஜா, மனதில் பட்டதை அப்படியே பட்டென்று சொல்லக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். அப்படிபட்ட தேஜா இப்படியொரு கமெண்ட் அடித்ததால், ’புஷ்பா..புஸ்பாவா’ என்பது போன்ற கமெண்ட்கள் வைரலாகி வருகிறது.

’’புஷ்பா’ படம் ப்ளாக்பஸ்டர் என்று தெலுங்கு சினிமாவில் ஆளாளுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மும்பையில் இந்தப் படம் எதிர்பார்ததைவிட பிரம்மாண்டமான வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இதனால் அந்தப் படத்தை சூப்பர் ப்ளாக்பஸ்டர் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆந்திராவில், இந்தப்படத்திற்கு போட்ட பணத்தை எக்ஸிபிட்டர்களால் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆந்திராவின் சில ஏரியாக்களில் நஷ்டம். ஆனால் பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஸ்யாம்’ படம் ’புஷ்பா’வை விட நன்றாக கலெக்‌ஷன் செய்திருக்கிறது.

இன்றைக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மல்ட்டிப்ளெக்ஸ்களுக்கு அதிகம் வருவது இல்லை. நினைக்க முடியாத அளவிற்கு தியேட்டர்களில் விற்கும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. இதனால்தான் தியேட்டர்களுக்கு மக்கள் அதிகம் வருவதில்லை.’’ என்று அதிரடியாக பேசியிருக்கிறார் இயக்குநர் தேஜா.
’படம் பார்க்க வருகிற ஆடியன்ஸை படத்தோடு ஒன்றிப்போக வைப்பது எமோஷன்தான். எமோஷனுக்கு மொழி ஒரு பிரச்சினை இல்லை. மொழி புரியாவிட்டாலும் கூட அதுதான் எல்லோரையும் கட்டிப்போடும். புஷ்பாவில் அப்படியொரு எமோஷன் இல்லாததால் இந்த பிரச்சினை’ என்றும் அடுத்த அதிரடியை இறக்கிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் தேஜாவின் கமெண்ட் ஒரு பக்கம் இருந்தாலும், உண்மையில் நடந்தது என்ன என்று தெலுங்கு சினிமா புள்ளிகளிடம் கேட்ட போது அவர்கள் புது காரணத்தை முன் வைக்கிறார்கள்.

’புஷ்பா’ படத்தைப் பொறுத்தவரை, படம் பார்ப்பவர்களை கடைசி வரை உட்கார்ந்து ரசிக்க வைக்கும் எமோஷன், ஆக்‌ஷன் என எல்லாமே இருக்கிறது. ஆனால் ஆந்திராவில் சில ஏரியாக்களில் இந்தப் படம் போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் போனதிற்கு காரணம் தியேட்டர் டிக்கெட் விலை என்கிறார்கள்.

ஆந்திராவில் அம்மாநில அரசு தியேட்டர் டிக்கெட்களின் விலையை திடீரென குறைத்தது. இதனால் பல தயாரிப்பாளர்கள் பெரும் பொருட்செலவில் எடுத்த தங்களது படங்களை வெளியிடலாமா இல்லை ரிலீஸை கொஞ்சம் தள்ளி வைக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்க, புஷ்பா மீது இருந்த நம்பிக்கையினால் அப்படத்தை தயாரிப்பாளர் வெளியிட்டார்.

ஆந்திர மாநில அரசு தியேட்டர் டிக்கெட்களின் விலையை மீண்டும் உயர்த்தி அரசாணையை வெளியிட்ட நேரத்தில் ’ராதே ஸ்யாம்’ படம் வெளியானது. இது ’ராதே ஸ்யாம்’ கொஞ்சம் வசூலைப் பெற உதவியிருக்கலாம் என்கிறார்கள்.

ஒரு படம் உண்மையில் லாபமா அல்லது நஷ்டமா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை ஒரு படத்தின் தயாரிப்பாளரால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியும். படத்தை எடுத்து முடிக்க ஆன மொத்த செலவு, அப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மேற்கொள்ளும் ப்ரமோஷனுக்கான செலவு, ஃபைனான்ஸ் வாங்கி படமெடுத்து இருந்தால் அதன் வட்டி எவ்வளவு, டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் எக்ஸிபிட்டர்களுக்கு கொடுக்க வேண்டிய ஷேர் மதிப்பு எவ்வளவு என இவை அனைத்திற்குமான தொகையை வசூலில் இருந்து கழித்த பிறகு மீதமிருந்தால் மட்டுமே அது லாபம்.

ஆனால் இங்கு வரவு செலவு எல்லாம் இன்னும் வெளிப்படையாக இல்லை. தயாரிப்பாளர்களிடம் ஒரு டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட் இருந்தால் தியேட்டர் உரிமையாளர்களிடம் வேறொரு டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட் இருக்கிறது. இதனால் உண்மையான வசூல் தெரிய சில நாட்கள் ஆகலாம். ஆனால் இன்று சோஷியல் மீடியாவில் ஆளாளுக்கு வசூல் வேட்டை. வசூல் மழை. 100 க்ரோர் க்ளப் என்றெல்லாம் சொல்வதால் வரும் பிரச்சினைதான் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...