No menu items!

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை – தவெக தீர்மானம்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை – தவெக தீர்மானம்

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று சென்னையில் இன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்ட்த்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு…

இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது.
இருமொழிக் கொள்கையில் உறுதி.

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான கையாலாகாத திமுக அரசுக்கு கண்டனம்.

டாஸ்மாக்கின் ஆயிரம் கொடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு.

பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும்.

கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்.
கட்சி தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கத் தலைவருக்கே முழு அதிகாரம் என முழுமனதுடன் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது.

கட்சிக்காக அயராது பாடுபட்டு மறைந்த கட்சி செயல் வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தீர்மான்ங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...