நடிகை நயன் தாரா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பிஸினஸ் செய்வதிலும் தொடர்ந்து ஆர்வமாக இருந்து வருகிறார். அவர் பல இடங்களில் தொழில் முதலீடு செய்து வைத்து கவனித்து வருகிறார். லிப்ஸ்டிக், பங்கு வர்த்தகம், துபாய் நகரத்தில் ஓட்டல், வைரங்கள் விற்பனை என்று பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
தன்னுடைய நைன் ஸ்கின் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும், ஸ்கிண்டிலைட் பூஸ்டர் ஆயில், ரெஜிவினேட் நைட் க்ரீம், , ஆண்டி ஏஜின் க்ரீம், உள்ளிட்ட பொருட்களை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு விற்பனைக்கு கொண்டு வந்தார்.
சிங்கப்பூரை சேர்ந்த, தொழிலதிபர் ஒருவரும் இந்த நிறுவனத்தில் நயன்தாராவின் பங்குதாரராக இருந்தார். நைன் ஸ்கின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்கள், ரூபாய் 999 முதல் அதிகபட்சமாக ரூபாய்.1899 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நயன்தாராவின் நைன் ஸ்கின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் ஸ்கின் கேர் பொருட்கள் மிகவும் கவனமுடன் தயாரிக்கப்படுவதாகுவும், சருமத்திற்கு பாதுகாப்பு கொடுக்க கூடிய இயற்கை மூலிகைகளின் எக்ஸ்ட்ராக்ஸ் தான் அதிகம் உள்ளதாக கூறப்பட்டது.
மிக குறுகிய காலத்திலேயே, நைன் ஸ்கின் அழகு சாதன பொருட்கள் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து… தன்னுடைய பிஸினஸை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல பக்கா பிளானுடன், அம்பானியின் வாரிசான இஷா அம்பானியுடன் கைகோர்த்துள்ளார் நயன்தாரா.
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துடன் நயன்தாரா பங்குதாரராக மாறியுள்ளார். இஷா அம்பானி தலைமையிலான இயக்கும் தீராவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் நயன்தாரா. எனவே இனி 9ஸ்கினின் தயாரிப்புகள் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் இணையதளத்திலும் கிடைக்கும்.
நயன்தாரா டிராவுடன் இணைவது குறித்து இஷா கூறுகையில்… “டிராவுடன் கூட்டு சேர்ந்து இந்திய சந்தையில் எங்கள் வரம்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து வகையான தோல் வகைகளுக்கும் சுத்தமான, பயனுள்ள மற்றும் நெறிமுறைகளோடு தோல் பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதே எங்கள் நோக்கம், டிரா மூலம் அதிகப்படியான மக்களை எங்களின் பொருள் கவரும் என பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.