நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் இன்று கோலாகலமாக நடந்த்து. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் தனுஷுக்கு சிறுவயதிலேயே தசை சிதைவு என்ற அரியவகை நோய் இருக்கிறது. இந்த நோய் ஒரு கட்டத்தில் தீவிரமாகி தனுஷால் நடக்க முடியாமல் போய்விட்டது. இதனால் சித்த வைத்தியம் மூலம் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளித்து வந்த நெப்போலியன் தன்னுடைய மகன் விருப்பத்திற்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.
தனுஷூக்கும், திருநெல்வேலி மாவட்டத்தின் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. தனுஷால் விமானத்தில் பயணித்து இந்தியாவுக்கு வரமுடியாத சூழலால் அவர் வீடியோ காலில் தனது நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார். பிறகு திருமணத்தை ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இவர்களது திருமணம் இன்று (நவ.,7) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி காலை 8:10 மணிக்கு நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன், அவரது மனைவி, நடிகர் விதார்த், முன்னாள் டிஜிபி ரவி, நடன இயக்குனர் கலா, நடிகர் வசந்த் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சிவகார்த்திகேயன் வாழ்த்து
இந்த திருமணத்தை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில், “தனுஷுக்கும் அக்ஷயாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். இன்றைக்கு நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ அதைவிட சந்தோஷமாக இனி இருக்க வேண்டும். தனுஷ் தம்பி உங்களுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும். அதேபோல் எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு நடந்த இந்த நிகழ்வு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.