நாக சைதன்யா சமந்தா இருவருக்கும் விவாகரத்து ஆன பிறகு இருவரும் தங்கள் பாதையில் பயணிக்க ஆரம்பித்தினர். இதில் சமந்தா ஒரு படி மேலே போல் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். விவாகரத்திற்கு பிறகு முதல் படமாக புஷ்பா படத்தின் ஓ அண்டவா பாடல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அந்தளவுக்கு அந்தப் பாடலில் கவர்ச்சிகரமாக நடித்திருந்தார். இவர்கள் இருவரும் பிரிவதை நாகார்ஜுனா விரும்பவில்லை எவ்வளவோ சமாதானம் செய்து வைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. சமந்தா எங்க வீட்டு பொண்ணுதான் என்று எவ்வளவோ பேசினார். ஆனால் சமந்தா பிரிவதில் உறுதியாக இருந்தா. தனக்கு திருமணத்திற்கு முன்பு நாகார்ஜுனா வீட்டின் சார்பாக கொடுத்த சீர் புடவையை அவர்கள் வீட்டுக்கே திருப்பி அனுப்பிய பிறகுதான் நாகார்ஜுனா அதிர்ச்சியாகி இது சீரியஸான விஷயம் என்பதை உணர்ந்து கொண்டார் அதன் பிறகு சமந்தாவை பற்றி எங்குமே வாய் திறந்து பேசுவதில்லை.
அன்றிலிருந்து தனது மகன் நாக சைதன்யாவை சமாதானப்படுத்தி அவரி தேற்றிக் கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்திலும் நடித்தார்கள். அதோடு சாய் பல்லவியோடு சேர்ந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருந்தார் இந்தப்படம் நல்ல வசூலை பெற்றது. மகனுக்காக இன்னும் சில படங்களை நடிக்க வைக்க நாகார்ஜுனா முயற்சி எடுத்துக்கொண்டார்.
அமலாவுக்கும் மகன் நாக சைதன்யாவுக்கும் நல்ல புரிதல் இருந்ததால் தனது அன்பால் அவரை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திக் கொண்டே வந்தார். மனதுக்குப் பிடித்த பெண்ணை நீயே தேர்ந்தெடுத்து கொள். சிறிது காலம் காதலித்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுங்கள் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டால் போதும். ஆனால் தனி ஆளாக இப்படியே இருக்கக்கூடாது. அதுவே பழகி விடும் என்பதை எச்சரித்துக் கொண்டே வந்தார். நாகார்ஜூனாவும் நேரம் கிடக்கும்போதெல்லாம் மகனுக்கு திருமணம் குறித்து வலிறுத்திக் கொண்டே வந்தார். அவர்கள் சொன்னது சோபித துலிபாலாவின் நட்பு கிடைத்தது. இருவரும் நண்பர்களாக பல நாடுகளுக்கு பயணித்தனர். முதல் முறையாக 2022ம் ஆண்டில் ஒரு நாட்டில் இருவரும் ஒரு ரெஸ்டாரெண்டில் இருக்கும்போது ரசிகர்கள் ஒருவர் எடுத்த புகைப்படம் வெளியானது. இது பரபரப்பாக வைரல் ஆனது. அப்போதே இருவரும் காதலிக்கிறார்கள் என்று பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் அது குறித்து வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அக்னேனி குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்படும் என்கிறார்கள். நாகா சைதன்யா சமீபத்தில் தண்டேலு படத்தில் நடித்து வருகிறார். அதில் சாய் பல்லவிதான் அவருக்கு ஜோடி. படப்பிடிப்பு ஆக்ஸ்ட் 8ம் தேதியன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் அன்று இருவரின் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதால்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த விழாவிற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் நாகார்ஜுனாவின் வீடு அலங்கரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனால் நாக சைதனுயா, சோபிதா இருவரின் திருமணம் நிச்சயம் நாகார்ஜுனா குடும்பத்தின் சார்பாக தெரிவிக்கப்படும் என்கிறார்கள்:.
இருவரும் பார்முலா கார் பந்தயம் பார்க்கப் போன இடத்தில்தான் அறிமுகமாகி நண்பர்களானார்கள். அன்று ஒரு நாள் சோபிதாவிடம் கேட்டபோது ஒரு நடிகர் மீது இருந்த என் மதிப்பீடு இப்போது மாறியிருக்கிறது. அதனால் அது காதலாக இருக்கலாம் என்று மட்டும் சொன்னார். அது நாக சைதன்யா என்று சொல்லவில்லை.