பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில், வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பேசி வருகின்றனர்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய ஆபரேஷன் நடத்தப்பட்டது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோரின் பெயர்கள் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகின்றது.
இவர்கள் இருவரும், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை தேர்வு செய்தது தொடர்பாக விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களையும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு வருகின்றனர்.