இந்திப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.
2 பாகங்களாக உருவாகும் இதில், ராவணனாக யாஷ் நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோட், தி சூசைட் ஸ்குவாட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றிய கய்நோரிஸ் இதன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். இதன் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் தயாரிப்பாளரான பிரைம் போகஸ் நமித் மல்ஹோத்ரா, இதன் பட்ஜெட் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.