சின்னச்சின்ன திருட்டுகள் செய்து விட்டு சிறைக்கு சென்ற பகத் பாசில் விடுதையாகிறார். வரும் போதே டூவீலர் வெளியில் வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் தனது திருட்டு வேலைகளை தொடங்கி விடுகிறார்.
குளித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் செல்போன், தியேட்டரில் சாவியோடு நிற்கும் பைக் என திருடிக் கொண்டு செல்லும் வழியில் ஒரு வீட்டைப் பார்த்துவிட்டு அதற்குள் திருட நுழைகிறார்.
அந்த வீட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருக்கும் வேலாயுதம் பிள்ளையை சந்திக்கிறார். தனக்கு அல்சைமர் நோய் இருப்பதாகவும், தன்னை கட்டிப் போட்டு துன்புறுத்தும் தன் மகனிடம் இருந்து காப்பாற்றுமாறும் தயாவிடம் வேண்டுகோள் வைக்கிறார். வேலாயுதத்தின் வங்கிக் கணக்கில் ஏராளமான பணம் இருப்பதை அறிந்து கொள்ளும் தயா, அவருடைய ஏடிஎம் பின் நம்பரை தெரிந்து கொள்வதற்காக அவர் சொல்லும் இடத்துக்கு எல்லாம் பைக்கில் அழைத்துச் செல்கிறார் அப்படி அவர்கள் செல்லும்போது நடக்கும் நிகழ்வுகளும், ஒருவரையொருவர் நம்பாமல் செய்யும் திருப்பங்களுமே படமாக விரிகிறது.
வடிவேலு எந்த படத்திலும் இல்லாமல் இதில் அமைதியின் சொரூபமாக வருகிறார். அவருக்கு அடையாளமாக இருக்கும் ஆர்ப்பாட்டமான நடிப்பும், நகைச்சுவையும் இதில் விட்டு குணச்சித்திர பாத்திரத்தில் நம மனைதில் நிறைவாக நிற்கிறார். பகத் பாசிலை கையாளும் நுட்பம் சில இடங்களைல் சிரிப்பை வரவழைக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் இளம் குழந்தைகளின் தயார்மார்களின் நாயகனாக ஜொலிக்கிறார் வடிவேலு.
பகத் பாசில் தனது மூர்க்கத்தனத்தை மறைத்து வடிவேலுவுடன் பயணிக்கும் இடம் சிறப்பாக செய்திருக்கிறார். இதுக்கு மேல் தாங்க முடியாது என்று நண்பர் விவேக் பிர்சன்னாவிடம் குமுறுவது ஒரிஜினல் பகத்.
விவேக் பிரசன்னாவுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு கனமான கதாபாத்திரம், அதை அவர் கச்சிதமாக செய்துள்ளார். போலீஸாக வரும் கோவை சரளா, ஃபஹத்தின் அம்மாவாக வரும் ரேணுகா, சித்தாரா உள்ளிட்டோர் சில காட்சிகளில் வந்தாலும் ஈர்க்கின்றனர்.
பரபரப்பாக செல்ல வேண்டிய கதை ஓட்டம் மெதுவாக தொடங்கியிருப்பதுதான் படத்தின் படத்தின் பலவீனமாக இருக்கிறது. சில இடங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதை சொல்ல முடிகிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு படம் வேகம் எடுக்கிறது. கொலைகளை யார் செய்தார் என்பது தெரிந்தவுடன் படம் தேங்கி நின்று விடுகிறது.
க்ளமேக்ஸ் காட்சியில் சிறிய அளவில் பரபரப்புடன் படம் முடிகிறது. சுதீஷ் சங்கர் இயக்கத்தில் மாரீசன் மன நிறைவை தரவில்லை
யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் தெரிகிறார்.
பாடல்கள் ஓகே ரகம். கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு ‘சிறப்பாக இருக்கிறது. நெடுஞ்சாலையின் அழகு தெரிகிறது.