உலக பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு எத்தனையாவது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த செய்தி விளக்குகிறது.
முதல் 10 பெயர்கள் கொண்ட லிஸ்டில் இந்திய பணக்காரர்களின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முகேஷ் அம்பானியின் பெயர் 18வது இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பட்டியலின்படி முதல் இடத்தில் எலான் மஸ்க், இரண்டாம் இடத்தில் மார்க் சக்கர்பெர்க் ஆகியோர் இருக்கின்றனர்.
- எலான் மஸ்க் – $342 பில்லியன்
- மார்க் ஸக்கர்பெர்க் – $216 பில்லியன்
- ஜெஃப் பெசோஸ் – $215 பில்லியன்
- லாரி எலிசன் – $192 பில்லியன்
- பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பம் – $178 பில்லியன்
- வாரன் பஃபெட் – $154 பில்லியன்
- லாரி பேஜ் – $144 பில்லியன்
- செர்கே பிரின் – $138 பில்லியன்
- அமான்சியோ ஓர்டெகா – $124 பில்லியன் 10. ஸ்டீவ் பால்மர் – $118 பில்லியன்
இந்த பட்டியல் நேற்று வெளியாகியிருக்கிறது. இதில் வழக்கமாக எலான் மஸ்க் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு 342 பில்லியன் அமெரிக்க டாலர். இது இந்தியாவின் 2025-2026ம் ஆண்டின் ஓராண்டு பட்ஜெட்டில் 57% பணமாகும்.
இரண்டாவது இடத்தில் மார்க் ஸக்கர்பெர்க் வந்திருக்கிறார். பேஸ்புக் இவருடையதுதான். ஆனால் இதற்கு முன்னர் 2வது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் இருந்திருக்கிறார். ஆனால் பெசோஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு $215 பில்லியன். அதேபோல பெர்னார்ட் அர்னால்ட் 4வது இடத்திற்கு சரிந்திருக்கிறார். மொத்தமாக 3,028 பணக்காரர்கள் இருப்பதாக போர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது. இதில் 406 பேர் பெண்கள் (13.4%).
வால்மார்ட் வாரிசு அலிஸ் வால்டன், உலகின் பணக்கார பெண் என்கிற இடத்தை பிடித்திருக்கிறார். மொத்த பணக்காரர்களில் அமெரிக்காவில் இருப்பவர்கள்தான் அதிகம். அமெரிக்காவில் 902 பணக்காரர்கள் இருக்கிறார்கள். சீனாவில் 516, இந்தியாவில் 205. முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் வரிசையில் 18வது இடத்திற்கு சரிந்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு $92.5 பில்லியன். இது எவ்வளவு பெரிய பணம் என்பதற்கு சில உதாரணங்களை பாரக்கலாம்.
இந்திய மதிப்பில் ரூ.7.68 லட்சம் கோடியை அம்பானி வைத்திருக்கிறார். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே (GDP) வெறும் ரூ.6.5 லட்சம் கோடிதான். இலங்கையின் மொத்த பொருளதாரத்தையும் அம்பானியால் வாங்க முடியும். உலகின் மிக உயரமான கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபா போன்று 20 கட்டிடங்களை வாங்க முடியும். மும்பை மாதிரியான 10 புதிய நகரங்களை உருவாக்கலாம். இந்தியாவின் 6 மாத GST வருவாய்க்கு ஈடானதுதான் அம்பானியின் சொத்து.