மளமளவென சிலருக்கு சினிமா கேரியர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போகும். அதில் சிலருக்கு உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே வெடித்து யு டர்ன் போடும் ராக்கெட்டின் நிலைமை பட்டென்று வந்துவிடும்.
இந்த மேற்படி விஷயத்திற்கு மிகச்சரியான உதாரணம் அழகும், திறமையும் சரிபாதியாக கலந்த காக்டெயில் போல் இருக்கும் கீர்த்தி சுரேஷ் [Keerthi Suresh,].
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் [Sivakarthikeyan], தனுஷ் [Dhanush] என்று வட்டமடித்தவர் விஜயுடன் [Vijay] ஜோடி சேரவும் செட்டில் ஆனார். ஆனால் கால்ஷீட் இல்லை. சம்பளம் அதிகம் வேண்டும் என இவரது மேனேஜர் தரப்பு கொஞ்சம் ஓவர் பில் டப் கொடுத்தது. கூடவே ‘நடிகையர் திலகம்’, சைஸ் ஸீரோ உடல்வாகு என இதர அம்சங்களும் பார்ட்னர்ஷிப் போட இன்று நிலைமை தலைக்கீழ்.
ஜெயம் ரவியுடன் நடிக்கும் ‘சைரன்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் ‘மாமன்னன்’ படங்களைத் தவிர வேறெந்த தமிழ்ப் படங்களும் கைவசம் இல்லை. தடாலடியாக ஏதாவது பண்ணலாம் என கவர்ச்சியை கடைவிரித்தும் மார்க்கெட்டில் டல்லடிக்க, என்ன செய்வது என கீர்த்தி சுரேஷ் யோசிக்கிறாராம்.
இதனால் தனது அப்பாவைப் போலவே திரைப்பட தயாரிப்பில் இறங்கலாமா என்று திவீர சிந்தனையில் இருக்கிறாராம். அதாவது மினிமம் பட்ஜெட், வித்தியாசமான கான்செப்ட் கொண்ட ஸ்கிரிப்ட்களை மட்டுமே எடுப்பது. மினிமம் கியாரண்டி படங்களைக் கொடுக்கும் வகையில் களத்தில் இறங்கலாம் என்று முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.
அப்பா இருக்க பயமேன்!
Keerthi Suresh, Siren, Mamannan, Jayam Ravi, Sivakarthikeyan, Dhanush, Vijay
சமந்தாவுக்கு அப்புறம் பூனம் கெளர்
‘மயோசிடிஸ்’ [Myositis] என்ற வியாதி இணையத்தில் வைரலானது. காரணம் சமந்தா.
ஊடகங்களில் எங்குப் பார்த்தாலும் சமந்தா புகைப்படத்தில் சிரித்தார். இன்னும் சில வீடியோக்களில் சமந்தா கவர்ச்சியாக ஆடிக்கொண்டிருந்தார். சமந்தாவின் பிரச்சினை கூட அவருக்கான பரபரப்பை உருவாக்கி இருந்தது.
இதனாலோ என்னவோ இப்பொழுது ஒரு முன்னாள் கவர்ச்சி நடிகை எனக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ’ஃபைப்ரோமயால்ஜியா’ [Fibromyalgia] வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்கிறார். அந்த நடிகை பெயர் பூனம் கெளர் [Poonam Kaur].
சமீபத்தில் ராகுல் காந்தி [Rahul Gandhi] நடைப்பயணம் செய்த போது அவரது கையைப் பிடித்தபடி போட்டோகள் எடுப்பதற்கு வசதியாக கொஞ்சம் தூரம் நடந்த அதே நடிகைதான். இவர் தமிழிலும் ஏழெட்டு படங்கள் நடித்திருக்கிறார்.
’ஃபைப்ரோமயால்ஜியா’ பிரச்சினையும் ஏறக்குறைய ‘மயோசிடிஸ்’ [Myositis] போலதான். மருந்து கிடையாது. தசைப் பிடிப்பாக படுத்தி எடுக்கும். கொஞ்சம் திவீரமானால் ஞாபக சக்தியிலும் இந்த வியாதி தனது பலத்தைக் காட்டும். ஆனால் இது மயோசிடிஸ் அளவிற்கு குடைச்சல் கொடுக்காது என்றாலும் அவதிதான்.
முதுகுவலியால் சுருண்டு போயிருக்கும் பூனம் கெளர், கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து கொண்டு, மும்பையில் ஒய்வெடுத்து கொண்டிருக்கிறார்.
Myositis, Fibromyalgia, Rahul Gandhi, Poonam Kaur
ஷங்கரை விரட்டும் கமல்ஹாஸன்.
ஒரேயொரு படம். ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றி போட்டிருக்கிறது. கடன்கள் அடைப்பட்டிருக்கின்றன. பெரும் பெயர் கிடைத்திருக்கிறது. மார்க்கெட் நிலவரம் பாஸிட்டிவாக மாறியிருக்கிறது. இத்தனையும் கமல் ஹாஸனுக்கு [Kamal] நிகழ்ந்திருக்கிறது. காரணம் ‘விக்ரம்’ [Vikram].
இதனாலேயே கட்டாய ஒய்வு எடுத்து கொண்டிருந்த ‘இந்தியன்’ தாத்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
’இந்தியன் 2’ வருமா வராதா என்று குழப்பத்தில் இருந் போதுத ஷங்கர், சைலண்ட்டாக ராம் சரணை வைத்து தெலுங்குப் படம் இயக்க போய்விட்டார். ஆனால் இப்போது ’இந்தியன் 2’ வேகமெடுத்து இருப்பதால், அவரை கோலிவுட் பக்கம் இழுத்துவரும் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
கமல் ஹாஸன் அடுத்து ஹெச். வினோத் [H Vindodh] மற்றும் மணிரத்னம் [Maniratnam] படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதால் ’இந்தியன் 2’ விரைவாக எடுத்து முடிக்க வேண்டுமென கமல் விரும்புகிறாராம்.
மார்ச் 2023-க்குள் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து கொடுங்கள் என ஷங்கரிடம் [Shankar] கமல் கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இதனால் ‘இந்தியன் 2’ வேலைகளை டிசம்பர் 5-ம் தேதி தொடங்க இருக்கிறார்களாம்.
Vikram, Indian 2, Kamal, Shankar, H Vindodh, Maniratnam