No menu items!

அரசியலில் கீர்த்தி சுரேஷ்? விஜய் கட்சியா?

அரசியலில் கீர்த்தி சுரேஷ்? விஜய் கட்சியா?

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதனால் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்து கொண்டு வருகிறார். சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கும் புரோமோஷனில் கீர்த்தி கலந்து கொண்டு பேசி வருகிறார். அப்படி மதுரையில் அவர் பேசிய பேச்சு வைரலாக பரவி வருகிறது.

அவர் பேசும்போது ரகு தாத்தா படத்தில் இந்தி திணிப்பைப்பற்றி சில இடங்களில் பேசியிருப்போம். பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவையாக சொல்லி இருக்கிறோம். குடும்பத்தோடு ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்கும் அளவுக்கு தரமாக இருக்கும். பெண்களின் உரிமைக்காக போராடக்கூடிய பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இதற்காக 1970 களில் பெண்களின் நிலையை தெரிந்து கொண்டு அவர்களின் கதையை படமாக்கியிருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்திலிருந்து இன்று வரைக்கும் பெண்கள் மீது திணிக்கப்படும் காட்சிகள் படத்தில் பரபரப்ப்பாக இருக்கும்.

இவ்வளவு விஷயங்கள் பெண்களைச் சுற்றி நடக்கிறதா என்று எல்லோருக்கும் தெரிய வரும். படத்தில் ஒரு இடத்தில் காலம் காலமாக வந்தால் கலாச்சாரம். திடீரென்று வந்தால் திணிப்பா என்று ஒரு இடத்தில் வசனம் வரும். கலாச்சாரம் என்ற பெயரில் சின்னச்சின்ன விஷயங்கள் திணிக்கப்படுவதை படத்தில் காட்டியிருக்கிறோம். எல்லாமே சீரியஸான விஷயங்களாக இருந்தாலும் படத்தில் பார்க்கும்போது காமெடியாக இருக்கும். இது முழுக்க காமெடி படம்தான். படத்தில் இந்தி திணிப்பைப் பற்றி பேசுவதால் பெண் கதாபாத்திரத்தை வைத்திருக்கிறோம். இதை ஒரு ஆண் நடிகர் நடித்திருந்தால் கதையை எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படி ஒரு படத்தை இதுவரைக்கும் பார்த்திருக்க முடியாது. இந்தி திணிப்பை மட்டும்தான் இதில் பேசியிருக்கிறோம். எதுவாக இருந்தாலு திணிப்பு என்றால் அது தப்பான விஷயம்தான்.

நான் அரசியலுக்கு வருவேனா என்று பலரும் கேட்கிறார்கள். படங்களில் நடிப்பது மட்டும்தான் இப்போதைக்கு நோக்கமாக இருக்கிறது. அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் அரசியல் ஆசை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். சினிமா எப்போதும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று பேசினார்.

கீர்த்தி சுரேஷை சுற்றி அரசியல் கேள்விகள் சுற்ற முக்கிய காரணம் அவர் விஜய்யுடன் படங்களில் நடித்து வரும் சூழலில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் அவருடன் சேர்ந்து அரசியல் பணியில் ஈடுபட வாய்ப்பு இருக்கலாம் என்பதால் தொடர்ந்து அது குறித்து கேட்படுகிறது சமந்தாவின் இந்த பேச்சு இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கீர்த்தி சுரேசிற்கு அடுத்ததாக ரிவால்வார் ரீட்டா என்ற படம் காத்திருகிறது. இதுவும் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...