No menu items!

கமல் 234 – மாமனாருக்காக மாப்பிள்ளை பார்த்த ஹீரோயின்!

கமல் 234 – மாமனாருக்காக மாப்பிள்ளை பார்த்த ஹீரோயின்!

மாப்பிள்ளை மணிரத்னமும், மாமனார் கமல் ஹாஸனும் சுமார் 36 வருட இடைவெளிக்குப் பிறகு இணைகிறார்கள்.

இதற்கு முன்பு இவர்கள் இருவரும் 1987-ல் வெளியான ‘நாயகன்’ படத்திற்காக ஒன்றாக பணிப்புரிந்தனர். அதற்குபிறகு இந்தாண்டில் இவர்கள் இருவரும் இணைய இருக்கிறார்கள்.

இந்தப் படம் கமல்ஹாஸன் நடிக்கும் 234-வது படம் என்பதால், இதற்கு தற்காலிமாக கே.ஹெச். 234 [KH 234] என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வழக்கம் போல் மணிரத்னம் நட்சத்திர தேர்வில் நீண்ட காலம் எடுத்து கொண்டிருக்கிறார்.

இந்த முறை இப்படத்தை பான் – இந்தியா படமாக எடுத்து செல்ல மணி ரத்னம் விரும்புகிறாராம். அதனால்தான் நட்சத்திர தேர்வுக்கு இவ்வளவு காலம் பிடித்திருக்கிறதாம்.

நட்சத்திரங்கள் விஷயத்தில் முழு திருப்தி ஏற்படாததால் தன்னுடையப் படங்களில் நடித்த நட்சத்திரங்களை மீண்டும் நடிக்க வைக்க மணி ரத்னம் ஆர்வம் காட்டுவதாக மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

அந்தவகையில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த ஜெயம் ரவி, த்ரிஷா இவர்கள் இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

அதேபோல் மணிரத்னத்தின் ‘ஒகே கண்மணி’யில் நடித்த, துல்கர் சல்மானையும் நடிக்க வைக்க தொடர்பு கொண்டிருக்கிறார்களாம்.

இவர்கள் மூவரும் கமலுடன் இணைவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்கிறார்கள்.

மணிரத்னம் எடுக்கவிருக்கும் இப்படம் ஒரு த்ரில்லர் வகையறா படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் ஹீரோ யார் என்பதில்தான் இங்கே ரசிகர்களுக்கிடையே போட்டி இருக்கும். என்னவோ அவர்கள் வாங்கும் சம்பளம் மாதிரி, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லையென்றாலும் கூட ரசிகர்கள் உற்சாகமாக இதைக் கொண்டாடுவது வழக்கமாகி விட்டது.
ஆனால் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை என்பதற்கு போட்டியே இல்லாத ப்யூட்டியாக இருக்கிறார் நயன்தாரா.

இதுவரையில் தமிழ்ப் படங்களில் நடிக்க 7 கோடி முதல் 8 கோடி வரை கேட்டு வந்த நயன்தாரா, பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கும் ஜவான் படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கியதாக கூறுகிறார்கள்.

ஜவான் படம் ஹிட்டாகி இருப்பதோடு, படத்திற்கு ப்ளஸ் நயனின் நடிப்பு என்றும் கமெண்ட்களில் அதிகம் அடிப்பட ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா. பொதுவாகவே இந்த ஹிட் சென்டிமெண்ட்டுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருக்கும். இதை வைத்து அறுவடை செய்துவிடலாம் என நயன் தரப்பு யோசிக்கிறதாம்.

இதனால் நயன்தாரா ஹிந்திப் படத்திற்கு வாங்கிய சம்பளத்தையே இப்போது தென்னிந்தியப்படங்களில் நடிப்பதற்கும் கேட்கிறாராம். அதாவது ப்ளஸ் ஒரு கோடி என சேர்த்து 11 கோடி சம்பளமாக கேட்டு தயாரிப்பாளர்களை நையப்புடைக்கிறாராம நயன்தாரா.

தென்னிந்திய நடிகைகளிலேயே இரட்டை இலக்க கோடிகளில் சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெருமையையும் அலேக்காக தட்டிச்சென்றிருக்கிறார் நயன்தாரா.

இதனால் விக்னேஷ் சிவன் ஏக உற்சாகத்தில் இருப்பதாக கொசுறு தகவலும் கசியந்திருக்கிறது.


’ஜவான்’ – அடேங்கப்பா அட்லீ

கோலிவுட்டிலிருந்து 2019-ல் மும்பைக்குப் பறந்த அட்லீ, அங்கே ஷாரூக்கானையும், அவரது முதல் பட கதாநாயகியுமான நயன்தாராவையும் வைத்து இயக்கிய ‘ஜவான்’ படம், இங்கே கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், ஹிந்தி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படம் வெளியான நான்கு நாட்களில், இந்தியாவில் மட்டும் திரையரங்கு வசூலாக சுமார் 286.56 கோடியை அள்ளிக்குவித்து இருக்கிறதாம்.

செப்டெம்பர் 7-ம் தேதி வெளியான ‘ஜவான்’ முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 75 கோடி வசூல் செய்திருக்கிறது. ஒட்டுமொத்த வசூலாக 150 கோடியை கடந்திருக்கிறது.

அந்த வார வெள்ளிக்கிழமையில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையில், இந்தியாவில் மட்டும் 29.03% சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் வசூல் 52.23 கோடியாக சரிந்து இருக்கிறது [இந்திய மொழிகள் அனைத்தும் சேர்த்த வசூல்].

ஆனால் ஜவானுக்கு வார இறுதியில் கூட்டம் அதிக வர தொடங்கியதால், சனிக்கிழமை 77.83 கோடி, ஞாயிறு 80.5 கோடி என வசூல் அதிகரித்து இருக்கிறதாம்.

இதற்கிடையில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டினால், டெல்லியில் மக்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்க, எல்லோரும் திரையரங்குகளுக்கு படையெடுத்து இருக்கிறார்கள்.

தொடர்ந்து வசூல் நன்றாக இருப்பதாக வியாபார வட்டாரத்தில் கூறுகிறார்கள். பான் – இந்தியா படமாக வெளியாகி இருக்கும் ‘ஜவான்’, படம் வெளியான மூன்று நாட்களில், ஒட்டுமொத்த வசூலாக 384.69 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இதனால் 2023-ல் வெளியாகி 300 கோடி வசூல் செய்தப் படங்களின் வரிசையில் ஜவானும் இணைந்திருக்கிறது.

பதானுக்குப் பிறகு ஜவானும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது. இரண்டுமே ஷாரூக்கான் நடித்தப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கு மத்தியில் ஜவானுக்கு வரவேற்பு தொடரும் நிலையில், இப்படம் வெளியாகி இருக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

ஜவானின் இந்த வசூலைப் பொறுத்தவரை பெரும்பாலான தொகை ஹிந்தி பேசும் சினிமா மார்க்கெட்டில் இருந்து வசூலானவைதான். ஆனால் இங்கே தமிழ் சினிமா ப்ரியர்களிடையே, அட்லீக்கு எக்கச்சக்கமான ட்ரோல்கள். ஒரே படத்திற்கான டிக்கெட்டில் 23 படங்களைக் கொடுத்திருக்கிறார் என்று படம் இருவர் அடித்த ட்ரோல் விமர்சனம் இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது.

பல காட்சிகள், கதாபாத்திரங்களும் கூட மெர்சல், பிகில், தாய்நாடு உட்பட பல படங்களில் ஏற்கனவே பார்த்து ரசித்தவையாக இருக்கின்றன என ஜவான் படம் பார்த்தவர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். சில காட்சிகள் அப்படியே அப்பட்டமான காப்பி. மனி ஹெய்ஸ்ட், ஜான் விக் என பலவற்றின் காட்சிகள் அப்படியே இருக்கின்றன,

இங்கே நம்மூரில் அட்லீக்கு இப்படியொரு ட்ரோல் இருந்தாலும், இந்த காட்சிகள் அனைத்தும் பாலிவுட்டுக்கு புதியது என்பதால் அங்கே ஜவானை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

பாலிவுட்டில் இதுவரை வசூலில் பின்னியெடுத்து கொண்டிருந்த ‘கடர் 2’ ஏறக்குறைய வசூல் வேட்டையை நிறுத்தும் நேரம் வந்துவிட்டது. இதனால் ‘ஜவான்’ தனியொருவனாக வசூலை தொடர வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...