சித்தார்த் தனது யூ டியூப் சேனல் மூலம் நண்பர்கள் ஜெகன், பிரியா பவானி ஆகியோருடன் சேர்ந்து நகரத்தில் நடக்கும் சில அநியாயங்களை மீம்ஸ் மூலம் தட்டிக்கேட்கிறார். பார்க்கிங் டாக் என்ற சேனல் பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப்பெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலை பார்க்கும் அப்பா சமுத்திரக்கனி கண்டிப்பானவர். சேனல் மூலம் சித்தார்த் நகரத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். கல்லூரி சீட்டு கேடுக் கிடைக்காமல் ஒரு பெண் தற்கொலை செய்ய அதை சேனலில் பதிவு செய்கிறார். பக்கத்து வீட்டில் தம்பி ராமையா மனைவி ரேணுகா லஞ்சம் வாங்கியதையும் மாட்டி விட ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் மீண்டும் இந்தியன் தாத்தாவை வர வழைக்க கம்பேக் இந்தியன் என்ற வாசகத்தை ட்ரெண்ட் செய்கிறார்.
இது இந்தியன் தாத்தாவான கமலுக்கு போய் சேர்கிறது. தாய்லாந்தில் இருக்கும் அவர் இந்தியா திரும்ப முடிவு செய்கிரார். அவர் வந்தாரா ? எப்படி லஞ்சம் வாங்குபவர்களை பழி வாங்குகிறார் என்பதை ஷங்கர் தன் பாணியில் சொல்லியிருக்கிறார்.
தாய்லாந்தில் கமல் ஒரு தொழிலதிபரை கொலை செய்யும் காட்சியிலிருந்து இந்தியன் வருகிறார். அடர்த்தியான ஒப்பனை, மீசை, தொப்பி என்று இருந்தாலும் ஏனோ மேக்கப் அவரது முகத்திற்கு சரியாக பொருந்தாமல் இருக்கிறது. அவரது வர்ம சண்டைக் காட்சிகளில் சுவாரஸ்யம் இருக்கிறது. அதுவும் சட்டையை கழற்றி விட்டு பாக்ஸர்களோடு மோதும் சண்டையில் ரசிக்க வைக்கிறார்.
ஊரே சேர்ந்து இந்தியனை அடித்து விரட்டும் காட்சியில் கமல் பரிதாபம் காட்டுவது நல்ல இடம். சேஸிங் காட்சிகளும், செண்டிமெண்ட் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. மூன்றாவது பாகத்திற்கான முன்னோட்ட காட்சிகளைப் பார்க்க தவறாதீர்கள். அசத்துகிறார் கமல்.
சித்தார்த், பிரியா யூ டியூப் நடத்தி தங்கள் வீட்டிலிருந்தே லஞ்ச ஊழலை தடுக்க நினைப்பது நல்ல திரைக்கதை. பாபி சிம்ஹா, விவேக், ஆகியோர் காவலர்களாக் வந்து கைதட்டல் பெறுகிறார்கள். பாபி சிம்ஹா இந்தியனை காப்பாற்றினாலும் அவருக்கு க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மனோபாலா தாய்லாந்து போன அனுபவத்தில் சிரிக்க வைக்கிறார். நெடுமுடி வேணு சில காட்சிகளில்தான் வருகிறார்.
சமுத்திரகனி இதைத்தான் செய்யப் போகிறார் என்று நாம் முன்கூட்டியே யோசிக்க வைத்து விடுகிறது.
முதல் பாகத்தில் திரைக்கதையில் இருந்த தெளிவும், கதாபாத்திரத்தை வடிவமைத்த தன்மையும் பெரிய பலமாக இருந்தது. அது இதில் இல்லாதது பலவீனம். இசை அனிரூத். தாத்தா வர்றாரு பாடல் மட்டும் கேட்க வைக்கிறது. பின்னணி இசை சத்தமாக ஒலிக்கிறது. ரவி வர்மாவின் ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது. நாட்டில் நடக்கும் ஊழல்களாக காட்டும் காட்சிகள் எல்லாம் மக்களுக்கு தொடர்பு இல்லாதது போல காட்டியிருப்பது வேகத்தை கொடுக்கவில்லை.
மூன்றாம் பாகத்தை பார்க்க வைக்க சில காட்சிகள் காட்டப்படுகிறது. அத்தனையும் ஈர்க்கும் ரகம். வி ஆர் வெயிட்டிங்.
இந்தியன் தாத்தாவுக்கு சல்யூட்