ஷ்ருதி ஹாசன் ஒரு வழியாக தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து இருக்கிறார். நான் இப்போது சிங்கிள்தான். காதலும் இல்லை. எந்த உறவிலும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
நீண்டகாலமாக லிவ்-இன் முறையில் இணைந்து வாழ்ந்த ஷாந்தனு ஹசாரிகாவுடன் இப்போது ப்ரேக் அப் என அறிவித்திருக்கிறார்.
நான்கு வருடங்களாக ஷாந்தனுவும், ஷ்ருதியும் ஒரு ஃப்ளாட்டில் சேர்ந்து வசித்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார்கள். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது உறவை முறித்து கொண்டிருக்கிறார்கள். சில நாட்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், இந்த மார்ச் மாதம் இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
ஷாந்தனு உடனான உறவை முறித்து கொண்டிருக்கும் ஷ்ருதி, இப்போது யாருடனும் இணைந்து வாழ்வதில் விருப்பம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இனி எப்படி சமாளிக்க போகிறீர்கள்.. அப்பாவுடன் இருக்க போகிறீர்களா அல்லது அம்மாவுடன் சேரப் போகிறீர்களா என்ற கேள்விகள் படபடவென எழவே, ‘நான் அப்பாவின் இளவரசியும் இல்லை, அம்மாவின் மகளும் இல்லை. இதற்காகவே என்னுடைய அம்மா, அப்பாவுக்கு நான் சூப்பர் தேங்க்ஸ் சொல்லவேண்டும். என்னுடைய வாழ்க்கையில் நான் எனக்கே ஒரு ராணியாக இருக்கிறேன்’
‘சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் பல வித்தியாசமான நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. ஆனாலும் பரவாயில்லை. ஓகே. நான் கொஞ்சம் பேட் பேபி’’ என்று தனது உதடுகளில் உலர்ந்த சிரிப்பொன்றை தவழ விடுகிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கைக்கொடுத்த விஜய்
விஜய் – வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக தயாராகி வரும் படம் ’கோட் – க்ரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இதில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
ஆனால் விஜயும் யுவனும் ஏறக்குறைய இருபது வருடங்களுக்குப் பிறகு இணைந்திருக்கிறார்கள். 2003-ல் வெளியான ‘புதிய கீதை’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த படத்திற்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. இதனால் இதற்கு பிறகு விஜய் படங்களில் யுவன் இசையமைக்கவே இல்லை.
இந்த மாதிரி சூழலில்தான் வெங்கட் பிரபு தனது இயக்கத்தில் விஜய் நடிக்கவே, யுவனை இசையமைப்பாளராக்கினார். ஆனால் சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலை விஜய் பாடியிருந்தும் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால் விஜய் ரசிகர்களே புலம்பும் அளவிற்கு சமுக ஊடகங்களில் பதிவிட்டார்கள். யுவனை கோபத்தில் கமெண்ட்களால் காயப்படுத்தினர். இதை பொறுக்க முடியாமல் யுவன் சமூக ஊடகம் பக்கம் தலைக்காட்டாமல் இருக்கிறார்.
இந்த மாதிரியான விஷயம் படத்தின் வியாபாரத்தையும் பாதிக்க வாய்ப்பு இருக்கும் என்பதால், ஏதாவது செய்தாகவேண்டிய சூழ்நிலை.
இதனால் விஜய் தாமாகவே முன்வந்து, யுவன் இசையில் மற்றுமொரு பாடலைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் ஹிட்டாகும் பட்சத்தில் ’விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த சுமாரான வரவேற்பு பிரச்சினை காணாமல் போய்விடும், படத்திற்கும் ஒரு வியாபாரம் கிடைக்கும் என திட்டமிட்டு அதை செயல்படுத்தியும் விட்டார்கள்.
விஜய் இதுவரையில் இரண்டு படங்களில் மட்டுமே இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். அந்த வகையில் கோட் மூன்றாவது படமாக அமைந்திருக்கிறது.
கான்ஸ் விழாவில் கலக்கும் தென்னிந்திய படங்கள்.
30 வருடங்கள். நீண்ட கால காத்திருப்பு. கான்ஸ் திரைப்பட விழாவில் பெரும் எதிர்பார்ப்பை சாத்தியமாக்கி இருக்கிறது இரு படங்கள்.
இதுவரையில் பணம் செலவழித்து கமர்ஷியல் பிரிவில் நம்முடைய இந்திய திரைப்படங்கள் அங்குள்ள சினிமா வியாபார புள்ளிகளுக்கு திரையிடப்பட்டு வந்தன. ஆனால் இப்போதுதான் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டு, விருதையும் வென்றிருக்கிறது ஒரு தென்னிந்திய திரைப்படம். தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும், இந்திய சினிமாவுக்கு இது ஒரு மாபெரும் வெற்றி.
’சன்ஃப்ளவர்ஸ் வேர் த ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டு னோ’ [Sunflowers Were the First Ones to Know] என்ற கன்னட குறும்படம் ’லா சினி’ [La Cinef] விருதை வென்றிருக்கிறது. இந்த குறும்படம் வெறும் 15 நிமிடங்கள்தான் ஓடுகிறது. ஆனால் கன்னட நாட்டுப்புற கலையைப் பற்றி சொல்லும் விதத்திற்காக இக்குறும்படம் விருதை வென்றிருக்கிறது.
மறுபக்கம் கான்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படும் உயரிய விருது ’பால்ம் டி ஓர்’ [Palm D’or] விருது என்பதால் இந்த விருதைப் பெற கடும் போட்டி இருக்கும். ஆல் வி இமாஜின் அஸ் லைட்’ [All We Imagine As Light] என்னும் மலையாளப் படம் இந்த கெளரவமிக்க கான்ஸ் திரைப்பட விழாவில் ’பால்ம் டி ஓர்’ [Palm D’or] விருதை வென்றிருக்கிறது.
இந்த மலையாளப் படத்தை இயக்கியவர் பாயல் கபாடியா. இவர் குஜராத்தி மொழி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிலும் கான்ஸ் திரைப்பட விழாவில் இந்த இரு படங்களின் மாபெரும் வெற்றி, தென்னிந்திய சினிமாவின் பெயரை உலகளவில் உரக்க சொல்லியிருக்கின்றன. இதற்கு முன்பாக இதே கான்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி, கேஜிஎஃப், ஆர்,ஆர்.ஆர், புஷ்பா என வரிசையாக தென்னிந்தியப் படங்களை வெளியிட்டு இருந்தார்கள்.