No menu items!

வேட்டையன் பாடல் – இப்படியொரு பின்னணியா?

வேட்டையன் பாடல் – இப்படியொரு பின்னணியா?

த.ச. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி , மஞ்சுவாரியார் நடிப்பில் தயாராகியிருக்கும் வேட்டையன். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

அந்த தேதியில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரிலீஸாக இருந்தது. ஆனால் ரஜினியின் வேட்டையன் வருவதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார் ஞானவேல்ராஜா. இந்த நிலையில் வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அனிருத்தின் அதிரடி பாஸ்ட் பீட் இசையில் வெளியாகியிருக்கும் இந்தப்பாடலில் ரஜினி மிகவும் இளமையான தோற்றத்தில் அட்டகாசமான நடன அசைவுகளுடன் மஞ்சுவாரியருடன் சேர்ந்து ஆடுகிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ரஜினியின் பாடல்கள் என்றால் அது அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் அதுதான் அவரது தனி அடையாளம். அதுவும் ரஜினியின் குரலை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் குரலான மலேசியா வாசுதேவன் குரலில் இந்த பாடலை ஏஐ தொழில்நுட்பத்தில் பாட வைத்திருப்பது இன்னும் சிறப்பாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இது போல் மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்தியிருப்பது இது 3 முறையாகும். முதலில் ஏ.ஆர்.ரகுமான் சாகுல் அமீது குரலை ராயன் படத்தில் பயன்படுத்தினார். அடுத்து கோட் படத்தில் யுவன் சங்கர்ராஜா பவதாரிணி குரலை பயன்படுத்தினார். தற்போது மலேசியா வாசுதேவன் குரலை அனிருத் பயன்படுத்தியிருக்கிறார்.

ரஜினியின் பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல் ஆரம்பத்தில் கச்சிதமாக இருந்தது. அவரும் ரஜினியின் ஸ்டைலுக்கு ஏற்ப தனது குரலை மாற்றி வித்தியாசம் காட்டி திரையில் ரஜினியே பாடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். இதனால் ரஜினி ரசிகர்கள் எஸ்.பி. பி. யை ரொம்பவே நேசித்தனர். இதனால் ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் அறிமுகம் பாடலை எஸ்.பி.பி. யே பாடுவது என்கிற நடைமுறை வந்தது. அண்ணாமலை படத்தில் வந்தேண்டா பால்காரன் பாடல் ரஜினி ரசிகர்களை ரொம்பவே உற்சாகப்படுத்தியது. அதன் பிறகு முத்து அருணாச்சலம், படையப்பா என்று பல படங்களில் ரஜினியின் முதல் பாடலை எஸ்.பி.பி.யே பாடினார்.

ரஜினியின் கொண்டாட்ட பாடலுக்கு மலேசியா குரல் கச்சிதமாக பொருந்தியது குறிப்பாக படிக்காதவன் படத்தில் சிவாஜிக்கு , ஒரு கூட்டுக்கிளியாக என்று பாடி விட்டு ரஜினிக்காக சொல்லி அடிப்பேனடி என்று அசத்தியிருப்பார். அடுத்த வாரிசு படத்தில் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பாடல் ரஜினி ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் முக்கிய பாடலாக இருக்கிறது.

இப்படி மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி. இருவரும் ரஜினிக்கு போட்டிப்போட்டு பாடிக்கொண்டிருந்தனர். மலேசியாவின் குரலில் மெல்லிய தடுமாற்றம் வந்தது. அருணாச்சலம் படத்தில் சிங்கம் ஒன்று புறப்ப்ட்டதே என்ற பாடல்தான் ரஜினிகாக மலேசியா பாடிய கடைசி பாடலாக இருந்தது. இதற்காக ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் ஐந்து பவுன் தங்க சங்கிலியை பரிசாக அளித்தார். அதன் பிறகு இப்போதுதான் ரஜினிக்காக வாசுதேவன் குரல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாட மலேசியா வாசுதேவன் குரலும் ஒரு காரணமாக இருக்கிறது.

இந்த நிலையில் அனிருத் மலையாளப்படத்தின் பாடலை காப்பி அடித்து இந்த பாடலை போட்டிருக்கிறார் என்று ஒரு பிரிவினர் சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.

வேட்டையன் திரைப்படத்தில், ரஜினியுடன் இணைந்து, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து நடித்திருக்கிறார். மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இவர்களுடன் ராணா டகுபதி, பகத் ஃபாசில், ஷர்வானந்த், ரமேஷ் திலக், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...