No menu items!

பிரதமர் மோடிக்கு கானா அளித்த கௌரவம் !

பிரதமர் மோடிக்கு கானா அளித்த கௌரவம் !

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கானா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ (The Officer of the Order of the Star of Ghana) விருதை அந்நாட்டின் அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் மோடிக்கு அணிவித்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி,”தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கௌரவம் இந்தியாவுக்கும் கானாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவம் இந்தியா – கானா இடையே வலுவான நட்பை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்படுத்துகிறது. இந்தியா எப்போதும் கானா மக்களுடன் துணைநிற்கும், நம்பகமான நட்பு நாடாக தொடர்ந்து பங்களிக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராகப் பதவியேற்றப் பிறகு மோடியின் முதல் கானா பயணம் இதுவாகும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை.

தொடர்ந்து, டிரினிடாட், டொபாகோ, ஆர்ஜென்டீனா மற்றும் பிரேசில் நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...