சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 23) 22 ஆபரணத் காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,380-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களாக 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது:
ஜூலை 23 ஒரு பவுன் ரூ.75,040
ஜூலை 22 ஒரு பவுன் ரூ.74,280
ஜூலை 21 ஒரு பவுன் ரூ. 73,440
ஜூலை 19 ஒரு பவுன் ரூ. 73,360
ஜூலை 18 ஒரு பவுன் ரூ. 72,880 என்று விற்பனையாகியுள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 அதிகரித்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.129-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,29,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.