No menu items!

முன்னாள் கணவர் திருமணம் – சமந்தாவின் உடைந்த இதயம்!

முன்னாள் கணவர் திருமணம் – சமந்தாவின் உடைந்த இதயம்!

நடிகை சோபித துலிபாலா நாக சைதன்யா இருவருக்கும் நேற்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் நகார்ஜுனா அக்னேனியின் குடும்பத்திற்கு சொந்தமான ஆடம்பர பங்களாவில் நடந்த இந்த நிகழ்வில் நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று சொற்ப ஆட்களே கலந்து கொண்டனர்.

நாகார்ஜூனாவே இந்த போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு படு வேகத்தில் இணையத்தில் வைரலாக பரவியது. ரசிகர்கள் எல்லோரும் நாக சைதன்யாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடினார்கள்.

அதே நேரத்தில் சமந்தா தரப்பில் என்ன மாதிரியான ரியாக்‌ஷன் வருகிறது என்று தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் பலரும் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில்தான் சமந்தா போட்ட ஒரு எக்ஸ் தள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் இதயம் உடையும் எமோஜியை பகிர்ந்திருந்தார். இந்த போட்டோவை சிலர் வேகமாக வைரலாக்கினார்கள். சமந்தாவின் இது போன்ற உணர்வு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. விவாகரத்து ஆன பிறகு இரு தரப்பும் யாரையும் குற்றம் சொல்லாமல் ஒதுங்கிக்கொண்டனர்.

ஒரு முறை சமந்தா நடித்த சகுந்தலா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பலரும் நாக சைதப்யா பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதையெல்லாம் சிரிப்பின் மூலமே கடந்து போனார். நாக சைதன்யா தரப்பிலும் இதே நிலைதான் இருந்தது. ஆனால் இப்போது சமந்தா இப்படியான எமோஜியை பதிவிட்டிருப்பது தெலுங்கு திரையுலகினரை மட்டுமல்ல அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் அந்த எமோஜியை போட்டதோடு, ஒலிம்பிக்கில் வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தனது இதயம் நொருங்கி விட்டதாக எழுதியிருந்தார். இதனால் அவர் நாக சைதன்யாவுக்கு சொன்ன பதிலா, இல்லை வினேஷ் போகத்துக்கு ஆதரவாக போட்டாரா என்பது சம்ந்தாவுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் இப்போது தெலுங்கு சினிமாவில் அதிகம் பேசப்படுவது இந்த பதிவு பற்றித்தான்.

இங்கே சமந்தாவுக்கு எதிராக ஒரு டீம் வேலை செய்துகொண்டே இருக்கும். இவர்கள்தான் இந்த எமோஜியை அதிகம் பரவ வைக்கிறார்கள் என்கிறார்கள். ஒரு முறை, திருமணத்திற்கு முன்பு மகேஷ் பாபு பற்றி ஒரு கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவரது ரசிகர்கள் பலரும் சமந்தாவை கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்தார்கள் அந்த நேரத்தில் சமந்தாவுக்கு ஆதரவாக இருந்த ஒரே தெலுங்கு ஹீரோ அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாதான். அப்படித்தான் அவர்களின் நட்பு உருவாகி காதல், கல்யாணம் வரை போனது.

இப்போது அதே டீம் சமந்தாவுக்கு எதிராக களம் இறங்கியிருக்கிறது. ஆனால் நாக சைதன்யா தரப்பு இதை பொறுப்பாக கையாண்டு எதற்கும் பதில் சொல்லாமல் தங்கள் திருமண கொண்டாட்டத்தை மட்டும் பகிர்ந்தனர்.

இந்த திருமணம் நடக்க இருப்பது சமந்தாவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அதனால்தான் இரு தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தன்னுடைய குணம் என்ன என்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்கிறார்கள் தெலுங்கு சினிமா பக்கம்.

என்னுடைய அப்பா நான் படிக்கும் போது எனக்கான செலவுக்கு அதிக பணம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். அதனால் நான் மாடலிங் செய்து பணம் சம்பாதித்தேன். அப்படி நான் செய்த ஒரு நகைக்கடை விளம்பரம் பார்த்துத்தான் சினிமா வாய்ப்பு வந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முயற்சி எல்லாம் நான் செய்ததில்லை. இது என்னுடைய இயல்பான விஷயம். அதை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். இதுவும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இன்னொரு பக்கம் நாக சைதன்யா சோபிதா திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்குள் சமந்தாவை என்ன பாடு படுத்தப் போகிறார்களோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...