No menu items!

கெனீஷை வம்புக்கு இழுக்காதீர்கள் – ஜெயம் ரவி

கெனீஷை வம்புக்கு இழுக்காதீர்கள் – ஜெயம் ரவி

ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரின் விவாகரத்து பரபரப்பு அடுத்தக்கட்டத்திற்கு சென்றிருக்கிறது. இருவர் வாழ்க்கையில் பாடகி கெனிஷா இருப்பதாக பேசபப்ட்டு வந்த நிலையில் தற்போது பாடகி கெஷீஷாவே இது பற்றி எக்ஸ் தளத்தில் ரியாக்ட் செய்திருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றிய ஒரு உரையாடல்.

கேள்வி ; ஜெயரவி – ஆர்த்தி விவகாரத்தில் நீங்கள் ஒரு சார்பாகவே பேசுவதாக நம் பார்வையாளர்கள் பலரும் நினைக்கிறார்களே ?

பதில் ; பார்ப்பவர்களுக்கு அப்படி இருக்கலாம். ஆனால் நமக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு ரவியிடமிருந்து நேரடியாக பதில் கிடைத்தது. ஆர்த்தியிடம் நாம் பல முறை பேச முயன்றும் அவர் பேசுவதை தவிர்த்தார். அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நாம் முயற்சித்தும் பேச விரும்பவில்லை. அதனால்தான் நாம் ரவியிடம் பேசிய விஷயங்களை பார்வையாளர்களுக்கு தெரிவித்தோம்.

கேள்வி ; இன்னொருவர் குடும்ப விஷயத்தை பொது வெளியில் பேசுவதும் விமர்ச்சிக்கபடுகிறதே ?

பதில் ; இதற்கு நாம் சொல்வதை விட ரவியே சொன்னதை சொன்னால் பொருத்தமாக இருக்கும். தொடர்ந்து எங்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதைவிட என் ரசிகர்களுக்காக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றுதான் இதை பொது வெளியில் தெரிவித்தேன் என்றார். அப்புறம் இந்த சமூகத்தில் மதிக்கத்தக்க செலிபிரிட்டியாக ஒருவர் மாறும்போது அதற்கு கொடுக்கப்படும் விலைதான் இது.

கேள்வி ; ரவி மீடியாக்கள்கிட்ட பேசும்போது கெனிஷா பாடகி பற்றி அவர் பேசியிருந்தார் யார் அவர் எப்படி நட்பு உருவானது ?

பதில் ; முழு பெயர் பெங்களூரை சேர்ந்த கெனீஷா பிரான்சிஸ். இவர் கோவா கிளப்களில் பாடல் பாடுபவர். அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறார். பல நாட்டு மேடைகளில் ராப் இசை பாடும் முன்னணி பாடகியாக இருக்கிறார். இவர் ஹீல் பண்ணுவதிலும் கெட்டிக்காரர். இதற்காக முறைப்படி பயிற்சி எடுத்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள், அதாவது ராஜராஜ சோழனாக அருண்மொழிவர்மன் பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது இங்குதான்.
இந்த நேரத்தில் நடந்த சந்திப்புதான் கெனீஷாவுக்கு ரவிக்கும் நட்பு ஏற்படுத்தியது ஒருமுறை ரவிக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது. அப்போது அவரை ஹீல் பண்ணி உடனடியாக சிகிச்சைக் கொடுத்தது கெனீஷாதான். இவரோடு சேர்ந்துதான் ஹீல் செண்டர் ஒன்றை தொடங்க இருப்பதாக சொல்லியிருக்கிறார் ரவி. இதில் ஆன்மீகமும் இருக்கும் என்றிருக்கிறார். எப்படி போகிறதென்று பார்ப்போம்

கேள்வி ; ரவியை அவரது மாமியார் சுஜாதா சந்தித்ததாக சொல்லியிருந்தீர்கள் அப்போது என்ன பேசப்பட்டது என்பது தெரியுமா ?

பதில் ; சுஜாதா அவர்கள் கை நீட்டிய இயக்குனர்களிடமெல்லாம் கதை கேட்டிருக்கிறார் ரவி. தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இதை தட்டாமல் செய்திருக்கிறார். காரணம் ரவியிடம் ஒப்பந்தம் போட்டு தேதிகளை சுஜாதா வைத்திருந்தார். இதனால் வெளிப்படங்களில் நடிக்கவும் முடியாமல் இருந்திருக்கிறது.

கேள்வி ; உறவுகாரர்களிடம் ஒப்பந்தம் ஒரு தடையாக இருக்க முடியுமா ?

பதில் ; இங்குதான் சிக்கலே ஆரம்பித்திருக்கிறது. ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் திரைப்படம் வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும் இதன் 2ம் பாகத்தை எடுக்க தயாராக இருக்கிறார் மோகன் ராஜா. இது பல வருடங்களாக அவர் எடுத்து வரும் முயற்சி. இந்த படத்திற்கு நடிக்க தேதி கொடுக்கும்போதுதான் சுஜாதா அவர்கள் தடை போட்டிருக்கிறார் என்ற தகவலும் இருக்கிறது. இது ரவி – ராஜா அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் பெரிய கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும் அளவுக்கு போய் விட்டது.

கேள்வி ; இது பற்றி ரவியிடம் கேட்டீர்களா ?

பதில் : கேட்டேன். அவரும் இதை ஆமாம் இது பல வருடங்களாகவே பிரச்சனையாக இருந்து வந்தது. இப்போதுதான் சரியாகி இருக்கிறது என்றார்.

கேள்வி ; இப்போதுதான் என்றால்… ஆர்த்தி பிரிவு அறிவிப்புக்குப் பிறகா ?

பதில் ; ஆமாம் . இதை அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவர் நான் இப்போதுதான் ப்ரியாக இருக்கேன் என்று சொல்லும்போது முகத்தில் அப்படியொரு பிரகாசத்தைப் பார்க்க முடிந்தது.

கேள்வி ; சுஜாதா அவர்கள் சொந்தப் படம் எடுக்கத்தானே தேதி வாங்கி வைத்திருக்கிறார் அவர் பக்கமிருந்து பார்த்தால் இது நியாயம்தானே ?

பதில் ; நியாயம்தான். ஆனால் இயக்குனர் பாண்டிராஜ் சொன்ன கதையை ரவி ஓகே சொன்ன பிறகு, ரவியின் சம்பள பேச்சு வந்திருக்கிறது. அதில் ரவி சில கோடிகள் சொல்லி அதில் உறுதியாக இருந்திருக்கிறார். ஆனால் சம்பளத்தை குறைக்கச் சொல்லியிருக்கிறார் சுஜாதா. ரவி மறுக்கவே இயக்குனர் பாண்டிராஜிடம் படத்தின் பட்ஜெட்டை குறைக்க அழுத்தம் கொடுத்திருக்கிறார் சுஜாதா. பாண்டிராஜ் மறுத்து விட்டு வேறு ஒரு ஹீரோவிடம் கதையை சொல்லி ஓகே வாங்கி விட்டார். நல்ல குடும்ப செண்டிமெண்ட் கதை கையை விட்டுப் போனதில் ரவிக்கு பெரிய மன வருத்தம் வந்திருக்கிறது. இப்படி சொந்த படமும் எடுக்காமல் அண்ணன் படத்திலும் நடிக்க விடாமல் இருந்தால் எப்படி.

கேள்வி ; இதற்கு மனைவி ஆர்த்தியை தண்டிப்பது போல் முடிவு எடுக்கலாமா ?

பதில் ; இந்த விவகாரங்களுக்கு முன்பே பல மாதங்களாகவே ஆர்த்தியை பற்றி வந்த தகவல்கள், அவரது நட்பு வட்டம் பழக்க வழக்கம் என்று இது எல்லாம் ரவிக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னொரு பக்கம் மாமியார் தரப்பில் தரப்பட்ட அழுத்தம் என்று ரவி இருதலைகொள்ளி எறும்பாக தவித்திருக்கிறார் என்பதை தெரிந்து முடிந்தது. அந்த அவஸ்தை தான் இந்த கடினமான முடிவை அவரை எடுக்கத் தூண்டியிருக்கிறது.

கேள்வி ; மகன்களுக்கு எப்படி புரிய வைத்தார் ?

பதில் ; பெரிய மகன் ஆரவ் இயல்பாகவே அப்பாவுடன் ஜெல் ஆன பையன். அதனால்தான் டிக் டிக் படத்தில் ரவியிடன் நடிக்க வேண்டும் என்ற போது இந்த விவகாரம் மெதுவாக வளர்ந்தபோது ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து மகனிடம் இதைச் சொல்லியிருக்கிறார். அதற்கு சில நாட்களுக்குப் பிறகுதான் இந்த விவாகரத்து அறிக்கையையே வெளியிட்டார் ரவி.

கேள்வி ; திரைத்துறையில் ரவியின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் ரவிக்கு எதிராக கருத்து சொல்லியிருக்கிறார்களே ?

பதில் ; நடிகை குஷ்பூ அவர்கள் இது பற்றி மனைவியை கைவிடுபர்கள் மனிதர்களே அல்ல என்று பொதுவான கருத்தை பகிர்ந்திருக்கிறார். நான் ஒரு முறை குஷ்பூவை பேட்டி எடுக்க சென்றபோது ரவியின் நட்பு குறித்து பிரமித்து பேசினார். சினிமாவில் ஒரு மேன்லியான நடிகர் என்றால் அது ரவிதான் என்று என்னிடம் கூறினார். இந்த பிரிவுக்கு நண்பர்கள் மட்டுமல்ல யார் வருத்தப்பட்டாலும் ரவியின் மன உணர்களை புரிந்து கொண்ட வகையில் இதில் அவர் மாறமாட்டார் என்றே தெரிகிறது.

கேள்வி ; கெனீஷா இது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறாரே ?

பதில் ; சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல, பாடகி கெனீஷா பற்றி ஆர்த்தி சொல்லாவிட்டாலும் அவரைச் சேர்ந்தர்வர்கள் பேசிப்பேசியே இன்று அவரே இந்த விவகாரத்தை பேசியிருப்பது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்றே சொல்லலாம். ரவி கெனீஷா ஒரு அநாதை. அவரை இழுக்காதீர்கள். அவர் திறமையான பாடகி. பல நாட்டு மேடைகளில் பாடி வருகிறார். நல்ல ஹீல் பண்ணும் திறமை உள்ளவர். எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து ஒரு ஆன்மீகம் மையம் வைத்து அதன் மூலம் அலரையும் ஹீல் செய்ய இருக்கிறோம் என்றிருக்கிறார்.

இனி ஆர்த்தி என்ன செய்வார். அவர் தரப்பு நியாயத்தை சொல்ல நான் கேட்க முயன்றபோது, கெனீஷா ரவி சம்மந்தப்பட்ட போட்டோ, வீடியோக்கள் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிடுவார் என்றும் தகவல் கிடைக்கிறது. இது எங்குபோய் முடியோ என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...